வக்பு நியாய சபையின் (Wakfs Tribunal) விசாரணைகளை ஒலிப் பதிவு செய்து வட்ஸ்அப்பில் அனுப்பியமை தொடர்பில் ஐசீ சீபிஆர் சட்டத்தின் கீழ் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாளிகாகந்த நீதவான் உத்த ரவிட்டுள்ளார்.
கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பாக கடந்த டிசம்பர் 21ஆம் திகதி வக்பு நியாய சபையில் இடம்பெற்ற விசாரணைகளை ஒலிப்பதிவு செய்து வட்ஸ்அப்பில் அனுப்பினார் என்ற குற்றசாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப் பட்டார்.
இதற்கு முன்னரும் இரு தடவைகள் இது போன்று வக்பு நியாய சபையில் இடம்பெற்ற கல்கின்ன பள்ளிவாசலின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்து வட்ஸ்அப்பில் அனுப்பியதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் மீண்டும் கடந்த 30ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
அதேவேளை, வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப் பதிவு செய்து வட்ஸ்அப்பில் அனுப்பியமை தொடர்பில் ஐசி சீபிஆர் சட்டத்தின் கீழ் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருதானை பொலிஸாருக்கு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கல்கின்ன பள்ளிவாசல் தொடர்பாக வக்பு நியாய சபையில் மனுத் தாக்கல் செய்துள்ள நுஸ்கி நஸீர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரனவும் சட்டத் தரணி கயால் தீக்சனவும் இந்த வழக்கு விசாரணையின் போது மன்றில் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளன.
மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரங்களை கொண்டுள்ள வக்பு நியாய சபையில் கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பாக ஐந்து பேரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முதலாவது பிரதிவாதியாக பிரபல தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
vidivelli
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments