Ticker

6/recent/ticker-posts

கரடிக்குப் பயந்து சுமார் 100 பள்ளிகளை மூடிய ஜப்பான்


ஜப்பானில் குறைந்தது 100 பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மூன்று நாள்களாகக் கரடி ஒன்று அங்குள்ள வீதிகளில் சுற்றித் திரிந்துகொண்டிருப்பதே அதற்கு காரணம்.

தோக்கியோவின் வடக்கே உள்ள உட்சுநோமியா (Utsunomiya) நகரில் கரடியைக் கண்டதாகக் கடந்த சனிக்கிழமையிலிருந்து (6 ஜூன்) 10 புகார்கள் பெறப்பட்டன.

கடைத்தொகுதி, பூங்கா, மேல்நிலைப் பள்ளி, பலசரக்குச் சந்தை போன்ற இடங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக் கரடி தேடப்பட்டுவருகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட கரடி உள்ளதா என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மக்கள் வீட்டுக்குள்ளும் வாகனங்களிலும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஜப்பானில் அண்மைக் காலமாகக் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

510,000 மக்களைக் கொண்ட உட்சுநோமியா நகரில் கடந்த ஆண்டு 2 கரடிகள் நடமாடியதாகக் கூறப்பட்டது.

ஆனால் அது உறுதிசெய்யப்படவில்லை.

seithi


 


Post a Comment

0 Comments