
சட்ட ரீதியற்ற முறையில், சட்ட விரோதமாக இயங்கி வந்த தெஹிவளை கல்கிஸ்ஸை பள்ளிவாசல் சம்மேலனத் தலைவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு ( TID ) விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.
2019 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பை தொடர்ந்து பல தொண்டு நிறுவனங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டன.
அந்த வகையில் தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் பள்ளிச் சங்கங்களும் உள்ளடங்குகின்றன.
இந்த தடை அறிவிப்பை தொடர்ந்து, தெஹிவளை கல்கிஸ்ஸை பள்ளிவாசல் சம்மேளனம் தடை செய்யப்பட்டதாக அந்தப் பொறுப்புதாரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுதல்களுக்கு அமைவாக முஸ்லிம் கலாச்சார அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அதை வழிநடத்திச் சென்ற நிர்வாகிகள் சம்மேலனத்தை நடத்திச் செல்வதை நிறுத்திக் கொள்ளாமல் சட்டரீதியற்ற முறையில் இயக்கியும் வந்துள்ளனர்.

மேலும் சட்டவிரோதமாக சட்டத்தினால் தடை செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பணங்களை வசூலித்து தனிநபர் வியாபார முயற்சிகளுக்கும் முதலீடு செயப்பட்டுள்ளதாகவும்,பெரிய அளவிலான ஊழலும் நடைபெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது .
இது பற்றி உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவிக்கும்போது, இது சம்பந்தமாக விரிவான விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தின் தலைவரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும்.
இது சம்பந்தமாக மேலும் பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், ஒரு சிலர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளாதகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ஊர்வாசிகள் பள்ளிவாசல்கள் ஒன்றிணைந்து சட்ட அங்கீகாரப்படி, தொண்டு நிறுவனங்களை அமைத்து மக்களின் நலன்களுக்காக துணை புரிவது சட்டத்தில் தடை இல்லை.
ஆனால் பெயர் குறிப்பிடப்பட்டு தடை செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திச் செல்வது, அதற்காக பணம் வசூலிப்பது சட்டப்படி தடையாகும் எனவும் தெரிவித்தார்.
இது சம்பந்தமான தகவல்கள் தொடர்ந்தும் விசாரணை செய்யப்படுவதாகவும், விசாரணையின் முடிவு சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வேட்டை நிருபர்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments