
வரலாற்று சிறப்புமிக்க தனது வெற்றிக்குப் பிறகு, டொனால்ட் டரம்ப் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாகப் பதவியேற்கின்றார். குடியரசு கட்சி வேட்பாளரான இவர், இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைகின்றார்.
இவரது பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த 130 ஆண்டுகளில், ஒரு முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அதே பதவிக்கு வருவதும், 78 வயதான ஒருவர் ஜனாதிபதியாவதும் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையானதாகும்.
அமெரிக்காவில் நிலவும் கடும் குளிர் காரணமாக, இம்முறை பதவியேற்பு விழாபொதுவெளியில் நடத்தப்படாமல்,உள்ளரங்கில் நடத்தப் படுகிறது.
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கும் ட்ரம்ப்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியின்போது துணை ஜனாதிபதியாக ஜே.டி.வான்ஸும் பதவியேற்கிறார்.
பதவியேற்றபின் ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றும்போது, அடுத்த நான்கு ஆண்டுகளில் தான் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை அவர் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் ‘அழகான அமெரிக்கா’ மற்றும் ‘இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட அமெரிக்கா’ போன்ற தேசபக்திப் பாடல்களை அமெரிக்காவின் பிரபல பாடகி கேரி அண்டர்வுட், பிரபல பாடகர் லீ கிரீன் வுட் ஆகியோர் பாடுவர்.
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஹங்கேரி, அர்ஜென்டினா, அதிபர்களின் வருகை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. சீனா ஜனாதிபதி ஜின்பிங் சார்பில் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் கலந்துகொள்கிறார்
அமெரிக்கா ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
தான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு சீனாவுக்கும், இந்தியாவுக்கு பயணங்களை மேற்கொள்ள ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், துணை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறும் கமலா ஹாரிஸ் ஆகியோரும் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பர்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் இந்நிகழ்வுக்கு வருகை தருவர்.
பதவியேற்பு விழாவுக்குப் பின், புதிய ஜனாதிபதி உடனடியாகத் தனது பணிகளைத் தொடங்கவுள்ளார்.
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments