
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று வெளியிடப்பட்டது. அந்த அணியில் முகமது சிராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முதன்மை பவுலர்களில் ஒருவராக அறியப்படும் அவர் புதிய பந்தை தவிர்த்து தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். அதனாலேயே அவரை சாம்பியன்ஸ் டிராபி அணியில் தேர்ந்தெடுக்கவில்லை என்று ரோகித் தெளிவுப்படுத்தினார்.
அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா (பேக்-அப்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அர்ஷ்தீப் சிங் தேர்வை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வரவேற்றுள்ளார். ஆனால் முகமது சிராஜுக்கு பதிலாக பெரிய அனுபமில்லாத ஹர்ஷித் ராணா தேர்வானது தமக்கு ஆச்சரியம் என்று அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் கௌதம் கம்பீர் தலைமையில் கடந்த ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்ல ராணா முக்கிய பங்காற்றினார். அதனால் அவருக்கு சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியிலேயே கம்பீர் வாய்ப்பு கொடுத்தார். அதில் முதல் போட்டியில் அசத்திய அவரை மற்ற போட்டிகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கியதால் கம்பீரே தாமாக நீக்கினார்.
அந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியின் பவுலிங் துறையில் கௌதம் கம்பீர் செய்துள்ள தவறான தேர்வு பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா, ஷமி ஆகியோருடைய ஃபிட்னஸ் பற்றி யாருக்கும் தெரியாது. அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் முகமது சிராஜுக்கு இடமில்லை. எந்தத் தவறும் செய்யாத போதும் அவருக்கு அணியில் இடமில்லை”
“எனவே சிராஜுக்காக நான் வருந்துகிறேன். அவர் அணியில் இருந்திருக்க வேண்டும். ஒரு ஸ்பின்னர் குறைவாக எடுத்திருக்க வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு முன்பாக ஹர்ஷித் ராணா இருப்பது எனக்கு ஆச்சரியமாகும். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது எனக்கு பெரிய செய்தியாகும். ஏனெனில் 3 வேகப்பந்து விட்டார்கள் மட்டும் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் அவர்களில் இருவரை மட்டுமே களத்தில் விளையாடுவீர்கள்”
“இதிலிருந்து நீங்கள் 3 ஸ்பின்னர்களை விளையாட உள்ளீர்கள் என்பது தெரிகிறது. தொடர் துவங்குவதற்கு முன்பாகவே உங்களுடைய ஆட்டத்தை கைகளுக்குள் துவங்கியுள்ளீர்கள் என்பதும் தெரிகிறது” என்று கூறினார். அதாவது இந்தியா தங்களுடைய போட்டிகளை விளையாட உள்ள துபாய் மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எக்ஸ்ட்ரா ஆதரவு கிடைக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சிராஜ் போன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளரை இந்தியா குறைவாக தேர்ந்தெடுத்துள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறுவது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments