Ticker

6/recent/ticker-posts

Ad Code



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 60 பில்லியன் டாலரை முதலீடு செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்


இவ்வாண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சுமார் 60 பில்லியன் டாலரை முதலீடு செய்ய மெட்டா நிறுவனம் திட்டம் கொண்டிருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பர்க் கூறியுள்ளார்.

அது குறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மெட்டா செயற்கை நுண்ணறிவு உலக அளவில் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மின்னிலக்கக் கருவியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

அதை ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவர் என்று நம்பப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் மெட்டாவின் Llama 4 அமைப்பு முக்கியமாகக் கருதப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

nambikkai


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments