Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கலா?.. உடனே செய்ய வேண்டிய காரியம் என்ன?


ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் சில் விடயங்களை உடனடியாக செய்ய வேண்டுமாம். அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக ஜிமெயிலில் பெரும்பாலான நபர்கள் தனது ஆதார் கார்டு, பான் கார்டுகளை வைத்திருப்பது வழக்கம். ஏனெனில் சில அவசர தேவைகளுக்காக நாம் இவ்வாறு வைத்திருப்போம்.

சிலர் ஒரு மின்னஞ்சலில் அதனை பயன்படுத்திவிட்டு மறந்துவிடலாம். ஆனால் அந்த விடயங்கள் தொடர்பான உங்கள் ஜிமெயில் கணக்கு உயிர்ப்புடன் இருக்குமாம்.

எனவே, தேவையில்லாத விஷயங்களுக்கு உங்கள் ஈமெயில் கணக்கை கொடுத்திருந்தால், அதை உடனடியாக நீக்குவது நல்லது. இதற்கான செயல்முறையை பார்ப்போம்.

ஜிமெயில் கணக்கில் உள்ளே சென்று, Profile-ஐ க்ளிக் செய்ய வேண்டும். அதில் Manage your Google Account என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பின்பு Security பகுதியைத் தேர்வு செய்து, Your connections to third-party apps என்பதை தேர்வு செய்யவும்.

அங்கு, உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் பட்டியலிடப்பட்டிருக்கும் நிலையில், இதில் தேவையற்ற அணுகல்களை தெரிவு செய்து Delete செய்துவிட வேண்டுமாம்.

நீங்கள் இவ்வாறு செய்துவிட்டால் உங்களது ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக இருப்பதுடன், தேவையற்ற சேவைகள் உங்கள் தகவல்களை அணுக முடியாது.

தேவையற்ற இமெயில்கள் மற்றும் ஸ்பாம் குறைவதுடன், சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

எனவே, ஜிமெயில் வைத்திருப்பவர்கள் ஒரு முறை இதைச் செய்து விடுவது மிகச் சிறந்தது ஆகும்.

manithan

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments