
இலங்கை தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இவருக்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2008 முதல் 2011 வரை இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றிய இவர், 2011 ஆம் ஆண்டு இந்தியா ஐசிசி உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய வழிகாட்டியாக இருந்தார்.
2011 முதல் 2013 வரை தென்னாபிரிக்க அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார்.
இவரது காலத்தில் அந்த அணி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் உலகின் முதனிலை இடத்தைப் பிடித்தது.
அண்மையில் நிறைவடைந்த 2026 ஐசிசி ஆடவர் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில் நமீபியா அணியின் ஆலோசகராகவும் அவர் பணியாற்றியிருந்தார்.
ஸ்ரீங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் அவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார். இதன்படி 2028 ஆம் ஆண்ட ஏப்ரல் 14 ஆம் திகதி வரை அவர் இந்தப் பதவியில் நீடிப்பார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அதன்படி, தென்னாபிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2027 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத் தொடருக்காக இலங்கை அணியைத் தயார்படுத்துவதே இவரது முதன்மையான பொறுப்பாகும்.
அத்துடன், இலங்கையின் தேசிய உயர் செயல்திறன் மையத்தின் (High Performance Center) கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1993 முதல் 2004 வரை தென்னாபிரிக்காவுக்காக விளையாடிய கெரி கிர்ஸ்டன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 14,087 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 21 டெஸ்ட் சதங்கள் மற்றும் 13 ஒருநாள் சதங்கள் உள்ளடங்குகின்றன.
hirunews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments