Ticker

6/recent/ticker-posts

மத்திய கிழக்கில் GPS சமிக்ஞை முடக்கத்தால் நடுக்கடலில் திண்டாடும் கப்பல்கள்


மத்திய கிழக்கில் மோசமடையும் பூசலால் அங்குள்ள கடற்பகுதியில் இருக்கும் கப்பல்கள் நடமாடுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.

GPS சமிக்ஞை முடக்கத்தால் கப்பல் இருக்கும் இடத்தை அவ்வப்போதோ தொடர்ந்தோ உறுதிசெய்ய இயலவில்லை.

அந்த வட்டாரத்தில் பூசல் தொடங்கிய பிறகு துணைக்கோள நடமாட்டச் சமிக்ஞைகள் இடைமறிக்கப்பட்டதால் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் காட்டும் GPS ஆற்றல் சரக்குக் கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்கள், இதர கப்பல்கள் போன்றவற்றில் குறைந்திருக்கிறது.

வளைகுடாவிலும் ஓமான் வளைகுடாவிலும் சுமார் 1,000 கப்பல்கள் அதனால் திண்டாடுகின்றன.

அந்த வட்டாரத்தில் நடமாடும் மொத்தக் கப்பல் எண்ணிக்கையில் அது கிட்டத்தட்ட பாதி என்று கூறப்படுகிறது.

பெரும்பாலான கப்பல்கள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் ஓமானுக்கும் அருகில் நடமாடுகின்றன.

எதிரியின் செயல்பாட்டை முடக்க GPS சமிக்ஞைகளை இடைமறிப்பது சிக்கலான ஒன்றல்ல.

அதை அறிந்து பூசலில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற சம்பந்தப்பட்ட நாடுகள் இவ்வாறு செய்வதுண்டு.

GPS சமிக்ஞை முடக்கத்தால் கப்பல்களுக்கு மட்டும் பாதிப்பல்ல...
விமானங்களும் சிரமத்தைச் சந்திக்கக்கூடும்.

seithi


 


Post a Comment

0 Comments