மருத்துவர் குமரன் மனம் ஒரு குழப்ப நிலையில் இருந்தது. அதற்குக் காரணம் உள்ளூரம் ராஜகுமாரியை நேசிப்பதே. அவரைக் குணப் படுத்தி விட்டு அதற்கு சன்மானமாய் அவரையே கேட்டு விடும் நோக்கோடு தானே குமரன் செயல் பட்டான். ஆனால் இன்று நடந்த அந்த நிகழ்வுகள் அவனை பல கோணத்தில் சிந்தனையைத் தூண்டியது. ஒரு மகன் இல்லை இரு மகன்களைக் கட்டிக் கொடுத்து அவர்களை இழந்து தன் மருமகளை இன்னும் நேசிக்கும் பிரியமான மாமனார் ஒரு புறம் கை ஏந்துகிறார்.
தனது ஒரே மகள் நலமானதும் தன்னோடு இருக்க வேண்டும். ஆட்சி நடத்த வேண்டும். மீண்டும் மகள் கம்பீரம் கொண்ட ராணியாய் வலம் வரவேண்டும் என்று பல எதிர் பார்ப்போடும் ஏக்கத்தோடும் ஒவ்வொரு நொடியையும் கடந்திடும் தாய் மகாராணி ஒரு புறம் .இதற்கிடையில் என் ஆசை விதை விருட்சம் கொண்டு பூவாய்க் காய்யாக் காய்த்துக் கொண்டே போகிறது கனிந்திடும் நாளை எண்ணி இவைக்கு என்ன முடிவு எப்படி
தீர்வு காண்பது.
ஒருத்தர் இல்லை இரு நாட்டு மன்னர்கள் அல்லவா எதிர்ப்புக் கூறுவார்கள்.
நம்மை சிறையில் அடைத்தால் கூட ஆச்சரியம் இல்லை. இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ராஜகுமாரி நலமடையாது இருக்க வேண்டும். அப்போதுதான் எப்போதும் நான் அவர் அருகே இருக்கலாம். ஆனால் அதனையும் தொடர முடியாது. கெடுக் கொடுத்து அல்லவா பணியில் அமர்த்தி உள்ளார்கள். என் பின் பலர் எதிர் பார்ப்போடு கூடவே இருக்கையில் இவையும் கை கொடுக்காதே. நமக்கு என்ன பண்ணுவது என்று பல விதமாய் சிந்தனைகளை அழைத்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.-
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments