Ticker

6/recent/ticker-posts

Ad Code



வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-22

வள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
வள்ளுவரின் திருவுருவப்பட வரலாறு!

"அறம்பொரு ளிம்பம்வீ டென்னுமந் நான்கின் 
திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும் 
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொல் 
கொள்ளா ரறிவுடை யார்" 

என்னும், வள்ளுவ மாலையின் எட்டாவது பாடலின் மூலம் நமக்கு விளங்குகிறது. 

வள்ளுவர், நல்ல பல கருத்துக்களை, உலகிற்கு வள்ளமையோடு தாம் சொன்னதால் அவருக்கு வள்ளுவர் எனப் பெயர் உண்டாயிற்று என்று சிலர் கொல்வது சரியாக இல்லை. 

இச்சொல், சிலர் சொல்வதைப் போல வள்ளமை என்று பொருள் குறித்து வத்திருந்தால் 'வள்ளல்' என்று தான் பெயர் வந்திருக்க வேண்டும். பழைய நூலுரைகளிலே, எங்கும் 'வள்ளுவர் என்ற சொல்லுக்கு வள்ளமைப் பொருளாகக் காணப்படவில்லை. 

தமிழ்க்கவி சரிதமுடையார். "வள்ளுவன் என்னும் சொல்லுக்குக் கற்றுணர்ந்தவன் என்பது தாதுப் பொருள்" என்று கூறுகிறார்.'வன்' என்னும் பகுதியால் உணர்த்தப்படும் பல விளக்கங்களுள் 'சுற்று உணர்தல்' என்பது இல்லை. வள் என்னும் சொல்லுக்கு:- ஒளிக் குறிப்பு, காது, கூர்மை நெருக்கம், வலி, வளம், யார், வாளுரை, வாள், கடிவாளம், படுக்கை,மை, பெருமை போன்ற விளக்கங்களைத் தமிழ் அகராதியிலே காண்கிறோம். 

எனவே வாரினால் செய்யப்பட்ட பறையினை அடித்துக் குறி சொல்லும், அறவிப்பைச் சொல்லும், அறிவுரையைச் சொல்லும் அவரது சாதி பற்றி வந்ததே 'வள்ளுவர்' என்றிருக்க வேண்டும் என்பதே சரியாக இருக்கும். 

இது நிற்க 

வள்ளுவருககு 'திருவள்ளுவர்' என்றுதான் பெயர் இருந்திருக்க வேண்டும் என்ற செய்தியை, நாம் வள்ளுவ மாலையில் உள்ள ஒரு சில பாடல்களின் வழியாகத் தெரிந்துகொள்ளலாம்

 வள்ளுவ மாலையில், பத்தொன்பதாவது பாடலை எழுதிய இரந்தையார்' எனும் புலவர் 

"தப்பா முதற்பாவாற் றாமாண்ட பாடலினான் 
முப்பாலி னாற்பான் மொழிந்தன ரெப்பாலும் 
வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழத் 
தெய்வத் திருவள் ளுவர்"

எனக் கூறுதலினால், வள்ளுவருக்குத் 'திருவள்ளுவர்' என்று தான் பெயர் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

(தொடரும்)



 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments