Ticker

6/recent/ticker-posts

Ad Code



விடுதலை!


இருளைக் கண்டதுமே 
துணையோடு தொடர்ந்த 
நிழலும் விடைக்கொடுத்து 
மறையும் போது ...

உறவென்று வந்ததும் 
துணையாக நின்றதும் 
மறந்து மாயமாகிட 
பிரிவென்று சொல்வதும் 
சாத்தியமின்றியா போகும் ..

பிரியா விடை என்றது 
சந்திப்புக்கு மற்றும் தானா? 
நினைவுக்கு என்று 
நியதிகள் இல்லையா? 
பிரியா விடையென்ற 
ஒன்றை தருவது தான் 
எப்படியோ?
தெரியலையே ?

புரிவாய் நடந்தவர்கள் கூட 
பிரிவைப்பற்றி நினைத்திட 
வைத்திடாதவர்க்கூட 
பிரிவதென்பது வழியொன்று 
இருக்கிறதே..

அதுவென்றால் பயபந்துருளூம் 
கப்ரின் வேதனை நினைத்து

பிடித்தமாய் தொங்கிக்
கொண்டவர்கள் 
பிடிவாதமாய் விட்டு அகல 
நினையாதவர்களை ..

காவெடுத்து சென்று
விடுகிறது மரணம் ..
பிரியா வரம் என்று 
நினைவுக்கு மட்டுமுண்டு 
பிரியா விடை என்று
நினைவுக்கு மட்டும் 
தான் இல்லை..


சஹ்னாஸ் பேகம்




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments