
385. வினா: தலைமையிடம் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும்?
விடை: தீக்காய்பவர் போல
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.(691)
386.வினா:தெய்வத்தோடு ஒப்ப கொளல் யாரை?
விடை:பிறர் மனக்குறிப்பைத் தானாக அறிபவரை
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல், (702)
387. வினா :நெஞ்சம் கடுத்தது காட்டுவது எது?
விடை: முகம்
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். (706)
388 வினா : அறிவிலார் முன் நாம் எப்படி இருத்தல் வேண்டும்?
விடை: ஒன்றுமறியாத சுண்ணாம்பு போல இருத்தல் வேண்டும்
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். ( 714 )
389. வினா : நன்று என்றவற்றுள்ளும் நன்றே - எது?
விடை : எதையும் முந்திக்கொண்டு பேசாத பண்பு
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.( 715 )
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments