Ticker

6/recent/ticker-posts

Ad Code



சக்கரை நோயால் அவதியா? அப்போ தினமும் இந்த பொரியல் சாப்பிடுங்க


தற்போது இருக்கும் உணவுப்பழக்க வழக்கத்தால் பல நோய்க்குள்ளாகிறோம். இதில் தற்போது வரை பலரும் பாதிக்கப்படும் ஒரு நோயாக பார்க்கப்படுவது சக்கரை நோய் தான்.

இந்த நோயை குணமாக்க நமது உணவெ போதும். இதற்கு நல் மருந்தாக பார்க்கப்டுவது கோவக்காய் தான். இதை வைத்து ஒரு சுவையான ரெசிபி செய்வதன் மூலம் சக்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

கோவைக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும், சொரி, சிரங்கு உள்ளிட்ட பல தோல் பிரச்சினைகளை எதிர்த்து போராட உதவும்.

இப்படி பல நன்மைகள் கொண்ட கோவைக்காயில் எப்படி பொரியல் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோவக்காய் - 1/2 கிலோ
தேங்காய் எண்ணெய் -4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
வெங்காயம் -1
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 2
கொத்தமல்லி விதை -1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
நிலக்கடலை - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்து பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் -1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் கோவக்காயை நன்றாக சுத்தம் செய்து அதை நீளவாக்கில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர்  ஒரு பாத்திரத்தை அடுப்பில் அதில்  நிலக்கடலை, கடலை பருப்பு,  உளுந்து பருப்பு,  மல்லி விதை, வெந்தயம்,  சீரகம், சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

 வாசம் வரும் வரை இந்த பொருட்களை வறுத்து ஆற வைக்க வேண்டும். இதை மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

கடுகு பொரிய ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்க்க வேண்டும். பின்னர் அதில் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய கோவக்காய் சேர்த்து கொஞ்சம் கலந்து விட வேண்டும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூளை சேர்த்து வேக வைக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து காயை மூடி வைத்து வேக விட வேண்டும்.

தேவை என்றால் அதில் லேசாக தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். காய் நன்றாக வெந்த பின்னர் துன்னர் அரைத்து எடுத்த மசாலா பொடியை சேர்த்து கலந்து விட வேண்டும்.

அதில் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு நிமிடம் மூடி வைத்து வேக விட வேண்டும். பின்னர் காயை நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இப்போது சுவையான கோவாக்காய் தயார்.

manithan




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments