வள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
வள்ளுவரின் திருவுருவப்பட வரலாறு!
மற்றும் திருவள்ளுவரின் காலம் அறிந்து கொண்ட நாம் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம்!
முதலில்,திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவருக்கு அவரது சாதிபற்றி வந்ததே அவரது பெயராக விளங்குகிறது,என்பதை பல சான்றோர்கள் எண்ணுகிறார்கள்.அது சரியான ஆராய்ச்சிதான் என்பது என் எண்ணம்.
அக்காலத்தில் பறையடித்துக் குறி சொல்லிப் பிழைக்கும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் வள்ளுவர் என்று அழைக்கப்பட்டனர்
வள்ளுவர் என்ற சொல் "வள்" எனும் முதல் நிலையில் பிறந்து தோல் வினைஞர் எனும் பொருள் பட வந்த சொல்லாகும்.
'வள்பு' என்பது தோலினால் செய்த வாரை உணர்த்துதல் போல "மாசறவிசித்த வாருறு வள்பின்" என புறநானூற்றிலும் "வள்பு தெரிந்தூர்மதி வலவ " எனும் ஐங்குறுநூற்றிலும் காணப்படுவதாகும்.
வாரினால் இறுக்கிக் கட்டப்பட்டுள்ள பறையினை அடித்து அறிவிப்புகளையும் குறியையும் சொல்லுதல் இது போன்ற வினைகளைச் செய்வோரே வள்ளுவர் என அழைக்கப்பட்டனர்.
வள்ளுவருக்கு, அவரது பெயர் வந்த காரணம் அவரது சாதி பற்றியே என்பதைத் தெளிவு படுத்தும் வகையில் வள்ளுவரின் காலத்தினரான மாமூலனார் கூறும் செய்தியில் நமக்கும் புலப்படுகிறது.
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments