அரண்மனை வந்ததும் மகராணியைப் பார்த்து தான் விடை பெறுவதாகவும் மீண்டும் வரும் போது நல்ல செய்தி இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறி விடை பெற்றார் கண்டிப்பாக சம்மந்தி ராஜாவே தாங்கள் சந்தோசமாய்ப் போய் வாருங்கள் என்று வழி அனுப்பி விட்டார் அவர் சென்றதுமே மந்திரியைப் பார்த்துக் கேட்டார் என்ன? மந்திரியாரே சற்று நேரத்தில் என்னைத் திக்குமுக்கு ஆட வைத்து விட்டீர்கள் முன்பே சொல்லி இருந்தால் நான் கொஞ்சம் தைரியமாக இருந்திருப்பேன் அல்லவா இப்படியா நீங்கள் திடிர்னு வார்த்தையை விடுவது எனக்கேட்டார்.
மந்திரி சிரித்து விட்டு அப்போது தான் எனக்கும் அப்படி ஒரு யோசனை தோன்றியது அவரை எப்படி சமாதானம் செய்து அனுப்புவது என்று புரியாமலே சிந்தித்துக் கொண்டே இருக்கக் அப்படி ஒரு எண்ணம் எழுந்தது உடனே செயலில் இறங்கிடுவோம் என்று தான் தாமதிக்காது கூறினேன் மகாராணியாரே தவறாக இருந்தால் மன்னிக்கவும் என்றார் மந்திரி.
அப்படி தவறு ஒன்றும் நான் கூறவில்லை மந்திரியாரே என் நிலமை அப்போது எப்படி இருந்தது என்பதைக் கூறினேன் அவ்வளவுதான் இப்போது சமாதானம் செய்து அனுப்பி விட்டோம் மீண்டும் வரும் போது என் மகளை அனுப்பிட வேண்டிய கட்டாயம் வந்து விடுமா மந்திரியாரே என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதுநினைக்கவே நெஞ்சி கலங்கி விடுகிறது என்றார் கலங்கிய கண்ணோடு மகராணி அதை பிறகு பார்ப்போம் போய்த் தூங்குங்கள் சிறுது நேரம் என்ற மந்திரி தன்னோட அறை நோக்கி நடந்தார் சிந்தனையோடு.
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments