380. வினா:எவை ஐந்தினை ஆராய்ந்து செயல் செய்ய வேண்டும்?
விடை :பொருள், கருவி, காலம், வினை, இடம்
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.(675)
381. வினா:எதனை விரைந்து செய்தல் வேண்டும்?
விடை:வேண்டாதவரை நட்பாக்கிக் கொள்வதே
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.(679)
382. வினா :தூது செல்பவரின் தகுதிகள் யாவை?
விடை :அன்பு, நற்குடிப் பிறப்பு
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.(681)
383. வினா :தூது செல்பவருக்கு இன்றியமையாதன எவை?
விடை:அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல் வன்மை
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று.(682)
384. வினா :நன்றி பயக்கும் தூது எது?
விடை:மனம் மகிழ நன்மை செய்யும் தூது
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது.
(685)
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments