எனது வயது 23. எனது முகம் அதிகளவு எண்ணைப் பொருள் சுரப்பதன் காரணமாக பள பளப்பாக உள்ளது.இது விடயமாக பலர் என்னிடம் தொடர்ச்சியாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தே மனம் தளர்ந்து போயுள்ளேன். பல வைத்தியங்கள் செய்தும் குணம் கிடைக்கவில்லை . இதற்கான பரிகாரம் ஏதும் இருந்தால் கூறவும்.
தோல் பொது மெது உடம்பில் மிகப் பெரிய பரப்பளவைக் கொண்ட ஒரு உறுப்பாகும். தோல் உடம்பின் வெப்ப நிலையைப் பேணுவதிலும் உடம்பை வெளிக்காரணிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றது.
அத்துடன் ஒரு மனிதனது கவர்ச்சியான தோற்றத்திற்கும் தோலின் ஆரோக்கியம் முக்கியம். தோலின் கீழ் வியர்வைச் சுரப்பிகள் இருப்பதைப் போன்று எண்ணெய்யில் பதார்த்தத்தை உற்பத்தி செய்யக் கூடிய சுரப்பிகளும் உள்ளன. எண்ணெய்ச் சுரப்பிகளினது தொழிற்பாடும் தோலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும். தோலை வரட்சியிலிருந்து பாதுகாப்ப தற்கு எண்ணெய்ச் சுரப்பிகளது பங்கு மிக முக்கியமாகும். எண்ணெய்ச் சுரப் பியின் தொழிற்பாடு குறைந்தால் தோல் ப வரண்டு ஈரலிப்புத் தன்மையற்றதாக இருப்பதோடு தோலைத் தொடும்போது மென்மையற்றதாக இருக்கும்.
அதேபோன்று இச்சுரப்பிகளின் தொழிற்பாடு கூடும் போது தோலின் தேவைக்கும் அதிகமாக எண்ணெய்ப் பதார்த்தம் சுரக்கப்பட்டு பல அசெளகரியங்களை இந்நிலையுடையவர்களுக்கு ஏற்படுத்தலாம். இதன் விளைவாக ஏற்படுத்தலாம். இதன் விளைவாக அதிக பளப்பளப்பான தோல் தூசி இல குவில் ஒட்டிக் கொள்ளல் மற்றும் தோல் தொற்று நோய்கள் போன்றவைகள் ஏற்படலாம்.
இது ஒரு சிலருக்குப் பரம்பரையாக ஏற்படும். அத்துடன் சில ஹோர்மோன் களின் தாக்கம், உணவுப் பழக்கவழக்கங் களில் ஏற்படுகின்ற மாற்றம், குடும்பக் கட்டுப்பாட்டு வில்லைகளின் தாக்கம், மகப்பேற்றுக் காலம், செயற்கை ப் பொருட்களடங்கிய உடல் அலங்காரப் பொருட்களை பாவித்தல், அதிக சூடான காலநிலை போன்றவைகளினாலும் ஏற்ப டுகின்றன.
இந்நிலை அனேகமாக இளைஞர்களைக் கூடுதலாகத் தாக்குகின்ற போதிலும் வயது கூடியவர்களிலும் இது காணப்படுகின்றது.
ஒரு சிலருக்கு உடம்பில் ஒரு குறிப் பிட்ட பாகத்தில் மாத்திரம் அதாவது 'நெற்றி, மூக்கு, நாடி, முதுகின் மேற்பகுதி போன்ற இடங்களில் மாத்திரம் கூடுத லாக எண்ணெய்ப் பதார்த்தம் சுரக்கப் பட்டு அப்பகுதிகள் பளப்பளப்பான தோற்றத்தைக் கொடுக்கின்றன.
மேற்குறிப்பிட்டது போல் குடும்பக் கட்டுப்பாட்டு வில்லைகள் பாவிப்பவர் களுக்கு இந்நிலை இருந்தால் நீங்கள் உங்களது குடும்ப வைத்தியரை நாடி அதற்குரிய ஆலோசனைகளையும் தேவையான சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அத்துடன் உடம்பைக் கவர்ச்சியாக்குவதற்காக வேண்டி பாவிக்கும் செயற்கை மற்றும் இரசாயனப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட (Cosmetic) பொருட் களை பாவிப்பதற்கு பதிலாக அல்லாஹ் எமக்கு இயற்கையாக வழங்கியுள்ள பொருட்களைப் பாவிப்போமேயானால் மேற்குறிப்பிட்டுள்ள நிலை வராமல் தடுக்கலாம்.
இந்நிலையினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு நீரைப் பருகுவதோடு கொழுப்புக் கூடிய உணவு வகைகள், பொரித்த உணவு வகைகள் போன்றவைகளைத் தவிர்க்க வேண்டும். தேவையேற் படின் ஒலிவ் எண்ணெயை மாத்திரம் உணவுக்காக பாவிக்கலாம்.
மேலும் மென்பானங்கள், மதுபானம் சேர்க்கப்பட்ட சிரப் மற்றும் மருந்து வகைகள் அதிகளவு சீனி, சொக்லேட் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும். - ஒரு நாளைக்கு 2 - 3 தடவைகளுக்கு மேற்படாத வகையில் இளம் சூடான நீரினால் மென்காரத்தைக் கொண்ட சவக்காரம் பாவித்து உடம்பை கழுவுதல் நன்று.
ஆனாலும் அடிக்கடி முகம் கழுவு வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அதிக பழவகைகள் உட்கொள் வது முக்கியம். -மேலும் தேசிக்காய்ச் சாற்றை சம் அளவு நீருடன் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒத்தடம் கொடுத்து பின்பு சூடான நீரினால் கழுவ வேண்டும்.
மேலும் தேசிக்காய் இலை, ரோஜாப் பூ இதழ், அதிமதுரம் போன்றவைகளை அவித்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஒரு கிழமைக்கு 2- 3 முறை ஆவியும் பிடிக்க வேண்டும். கற்றாளையிலிருந்து பெறப்படும் ஜெல் (Aloevere gel) இனை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஒத்தடம் கொடுத்த பின்பு பூசலாம் மேலும் வைத்தியர்களின் ஆலோசனைப்படி ஒரு சில விற்றமின் மாத்திரைகளை பாவிப்பது முக்கியம். நவீன வைத் தியத் துறைகளிலும் யுனானி வைத்தி யத்துறையிலும் பல சிகிச்சை முறைகள் இருந்த போதிலும் நோயாளிகள் உணவு உட்கொள்வதிலும் ஏனைய பழக்க வழக்கங்களிலும் அலட்சியமாக இருப்பதன் காரணத்தினாலேயே இந்நோயை கட் டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகின்றன. யுனானி வைத்தியத்துறையில் பல உட்கொள்ளக் கூடிய மருந்துகளும் மற்றும் வெளிப்பூச்சு மருந்துகளும் உள்ளன.
இறுதியாக வாசகர்களுக்கு விசேடமாக பெண்களுக்கு ஒரு செய்தியாக ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றேன்.
நீங்கள் அலங்காரப் பொருட்களாகப் பாவிக்கக் கூடிய இரசாயனப் பொருட்களடங்கிய கவர்ச்சியான பொருட்களே உங்களது இயற்கை அழகை விகாரமாக்கி விடலாம். மேலும் இவ்வாறான பூச்சு மருந்துகள் (Cosmeties) சில வேளைகளில் தோல் புற்று நோயைக் கூட ஏற்படுத்தலாம். - எனவே இயற்கையாக அல்லாஹ் எமக்குத் தந்த அழகை இயற்கைப் பொருட்கள் கொண்டே பாதுகாக்க வேண்டும்.
DR.NASEEM
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments