கடந்த கொரோனா காலத்தில், கொரோனாவினால் இறந்த உடல்கள் பலாத்காரமாக கட்டாய தகனம் செய்யப்பட்டது.
அரசாங்கத்தின் இத்தீர்மானமானது சர்வதேச ஆலோசனைகளையும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களையும் மீரும் வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட ஒரு பாரிய அநீதியாகும்.
இவ்வாறு கொரோனாவால் மரணித்து, பலாத்காரமாக கட்டாய தகனம் செய்யப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டவர்களின் தகவல்களை ஒன்று திரட்டி, வரலாற்றின் ஓர் ஆவணமாக பாதுகாக்கவும், இக்கடூர செயலினால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு அரசாங்கத்திடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்கவும் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் குடும்பங்களில் இருந்து விவரங்களை திரட்டும் விதமாக விண்ணப்பம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டிருந்தோம்.
இத்தளமானது சில சமூக துரோகிகளான சுயநலவாதிகளால் முடக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு இதற்காக இழப்பீட்டை வாங்கிக் கொடுக்க நெஞ்சில் இடமில்லாத ஒரு கூட்டமே இச்செயலை செய்துள்ளனர்.
மேலும் கடந்த கொரோனா காலத்தில் கொரோனா ஜனாஸாக்களை வைத்து பிழைப்பு நடத்திய ஒரு கூட்டமே இதன் பின்னணியில் இருந்து இதற்கு துணை போனதாக அறிந்து கொள்ள முடிந்தது.
இவர்கள், கடந்த கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கவும் வெளிநாடுகளில் இருந்தும், தொன்டு நிறுவனங்களில் இருந்து வழங்கப்பட்ட பெருந் தொகையான நன்கொடைகளையும் விழுங்கி ஏப்பமிட்டதோடு,கொரோனா ஜனாஸாவில் கஷ்டப்பட்டவர்களு க்கான பாராட்டு விழா என கடந்த காலத்தில் ஷங்கிலா ஹோட்டலில் ஒரு பாராட்டு விழாவையும் நடத்தி வெளிநாட்டில் இருந்து பண உதவிகளை வழங்கிய மக்களுக்கும் கணக்குகளை காண்பிக்கவும் கொரோனா ஜனாஸா காலத்தில் அதற்காக பாடுபட்ட நல்லுள்ளம் படைத்த சகோதரர்கள் பட்ட கஷ்டங்களை தமது கணக்கிலே வரவு வைத்துக்க கொள்ளவும் பாராட்டு விழா நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
பல லட்சம் ரூபாய் செலவு செய்து நடத்தப்பட்ட இக் களியாட்டத்தில் கொரோனா காலத்தில் கோரோனா ஜனாஸாவுக்காக கஷ்டப்பட்ட ஒரு ஓர் இருவரை தவிர யாரும் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதில் பங்கு கொண்ட ஓர் இருவர் நீங்களாக அனைவரும் இதனால் லாபம் அடைந்தவர்களே தவிர, கோவிட் ஜனாஸாவுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
கொரோனா ஜனாஸா காலத்தில் கஷ்டப்பட்ட சகோதரர்கள் அல்லாஹ்விடம் நன்மையையும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே எதிர்பார்த்து கஷ்டப்பட்டார்கள். இவர்கள் யாரும் சங்ரில்லா களியாட்டத்தில் கொண்டாடவும் பாராட்டுப்பெறவும் கொரோனா ஜனாஸாவுக்காக கஷ்டப்பட்டவர்கள் அல்ல.
அரசியல் பின்னணியை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட, மக்களின் விமர்சனத்திற்குள்ளான ஓட்டமாவடி என்ற திரைப்படமும் இவர்களால் நடத்ப்பட்ட நாடகத்தின் ஒரு பகுதியாகும். இந்தப்படத்தில் கோரோனாவின் சரித்திரங்கள் திரிபு படுத்தி எடுக்கப்பட்டதை மக்கள் யாவரும் அறிவர்.
அல்லாஹ்வுக்காக என கஷ்டப்பட்ட எந்த சகோதரர்களும் கொரோனா படம் நடிக்கவோ, சமூகத்திற்கு படம் காட்டவோ முன்வரவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருபாதியை நாடி மட்டுமே செயல்பட்டார்கள்.
இவை அனைத்திலும் கோரோனா ஜனாஸாக்களை எரிக்க முழுக்காரணமாக இருந்த கண்டியைச் சேந்த ஒர் ஆன்மீக வாதியின் சகோதரரே முக்கிய கதாநாயகநாக கணப்படுவதும் குறிப்பிடத்தாக்கதாகும்.
கடந்த கொரோனா காலத்தில் ஓடி ஒளிந்திருந்த இவர்கள் இதனால் வந்த வருமாணங்களை பங்கு வைக்கவும், படம் நடிக்கவும் வெளியே வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கொரோனா ஜனாஸாவை வைத்து பிழைப்பு நடாத்தியவர்கள், மக்களுக்காக அன்பளிப்புச் செய்யப்பட்ட பணத்தை ஏப்பம் விட்டவர்களின் விபரங்கள், இதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் ஆன்மீகம் போன்றவர்களின் விபரங்கள் காலப்போக்கில் மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு சூசகமாக வெளிடப்படும்.
இன்ஷா அல்லாஹ் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் தரவுகளை பெற்றுக் கொள்ள வேறு ஒரு வழி முறை மக்களுக்கு அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பேருவளை ஹில்மி
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments