Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஜனாதிபதி நிதியம்;பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்


ஜனாதிபதி நிதியில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய பொலிஸ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

ஜனாதிபதி நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 34 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தின் முக்கிய நோக்கங்களுக்குப் புறம்பான நோக்கங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை பெற்றுக்கொண்டமை அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தெரியவந்துள்ளது.

12.25 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை முறைகேடு செய்யபட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

tamilmirror




Post a Comment

0 Comments