முளைக்கட்டிய பயிர் வகைகள் ஆரோக்கியம் நிறைந்தது. இதனை பல வழிகளில் உட்கொள்ளலாம். அப்படியே ஊறவைத்தோ பச்சையாக சாப்பிடலாம், இல்லையென்றால் வேகவைத்தோ, குழம்பு வகையாக சாப்பிடலாம். ஆனால், நம்மில் பலர் அதை உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவதில்லை. முளைக்கட்டிய பயிரைக் கொண்டு சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பே தோற்கும் அளவுக்கு, பல மசாலா பொருட்கள் சேர்த்து உடலுக்கு ஆரோக்கியமான, டேஸ்டான முளைப்பயிர் குழம்பு செய்து கொடுத்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என அனைத்து வகை உணவுக்கும் ஏற்றது. இந்த சுவையான குழம்பை எப்படி செய்யலாம்னும் பார்க்கலாம்.
முளைப்பயிர் குழம்புக்கு தேவையான பொருட்கள் :
முளைப்பயிர் - 2 கப்.
வெங்காயம் - 1.
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
தக்காளி - 1.
பச்சை மிளகாய் - 2.
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்.
சீரகம் - ½ ஸ்பூன்.
கொத்தமல்லி பொடி - 1 ஸ்பூன்.
கரம் மசாலா - ½ ஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை விளக்கம் :
முதலில், 2 கப் முளைக்கட்டிய பயிரினை தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்யவும். பின்னர் இதனை ஒரு குக்கரில் 2.5 கப் தண்ணீருடன் சேர்த்து, 2 முதல் 3 விசில் வர விட்டு அவித்து தனியே தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதனிடையே தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தயார் செய்த்துக் கொள்ளவும். அதேநேரம் குழம்புக்கு தேவையான மற்ற பொருட்களையும் தயார் செய்து கொள்ளவும். தற்போது குழம்பு செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வேக வைக்கவும். தொடர்ந்து கொத்தமல்லி பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும். தக்காளி நன்கு வதங்கிய நிலையில், அவித்து தனியே எடுத்து வைத்த முளைப்பயிரினை இதனுடன் சேர்த்துத்துக் கொள்ளவும். அதேநேரம் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
10 - 15 நிமிடத்திற்குள் முதல் கொதி வந்துவிடும். முதல் கொதி வந்ததும் குழம்பின் மீது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான முளைப்பயிர் குழம்பு ரெடி…ஆரோக்கியம் மிக்க இந்த முளைப்பயிர் குழம்பினை ரொட்டி அல்லது வெள்ளை சாதத்துடன் சுட சுட பரிமாறலாம். பயிர்வகை கொண்டு செய்யப்படும் இந்த குழம்பு பரோட்டாவிற்கும், சப்பாத்திக்கும்தோதாக இருக்கும்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments