Ticker

6/recent/ticker-posts

மெக்சிகோ வெள்ளம்: 64 பேர் உயிரிழப்பு - படகுகள், விமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருள்கள் விநியோகம்


மெக்சிகோவில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் படகுகள், விமானங்கள், வானூர்திகள் வழியாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷேன்பாம் (Claudia Sheinbaum) தெரிவித்துள்ளார்.

சுமார் 10,000 ராணுவ வீரர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஒரு வாரமாய் அங்கு கனத்த மழை பெய்து வருகிறது. அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.

65 பேரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். அவர்களில் 43 பேர் ஹிடல்கோ (Hidalgo) மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

தொடர்ந்து பெய்த மழையால் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நிலச்சரிவுகளால் பாலங்களும் சேதமடைந்துள்ளன.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய சாலைகளில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தும் பணியில் குடியிருப்பாளர்களும் உதவி வருவதாக AFP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

nambikkai

 


Post a Comment

0 Comments