முறிந்து போன தேக
எலும்பைக்காட்டிலும்
பெரிதொரு வலியைத்தருவது
தான் முறிந்து போகும் உறவின்
பிரிவின் வலியல்லவா..
யாருக்கு தானில்லை
அப்படியொரு வலி
எப்படி எப்படியோ இருந்த
காலம் மாறி விடுபெடும்
தருணமாகும் போது
வலியை நிர்ணயமாக்கிட
தெரிவதில்லை தானே...
பிரிவுகள் பல வகையாகலாம்
சற்று பிரிதல் என்பது கொஞ்ச நேரம்
பிரிந்து சேர்வது தானே
அதுப்போலவே இடத்தால்
பிரிதல் கூட வலித்தாலும்
பார்த்துக்கொள்ளலாம்
எப்போதுனாலுமென்று
தேற்றிடலாமல்லவா...
முறிவு என்பதோ முற்றும்
பிரிதலல்லவா
இனிதொரு சந்திப்பல்ல என
உறுதியாகிடும் பிரிவின்
துயர் வலி யாரால் தான்
யாருக்கு உணர்த்துதலோ ...
முறிந்து போகும் போது
ஓர் உறவுக்கல்லவா உயிர்த்துடிப்பும்
நிறுத்தத்துடிப்பாய் துடிக்குமல்லவா ...
சஹ்னாஸ் பேகம்
முதலைப்பாளி, புத்தளம்
இலங்கை
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments