
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் அடுத்த தலைமுறையினருக்கு பேராபத்தாக அமையும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இன்றைய தலைமுறையினரை அதிகம் ஈர்க்கும் ஒன்று தான் வாசனை திரவியங்கள். உடல் வாடை வராமல் தடுக்க உதவும் இந்த வாசனை திரவியங்கள், பலருக்கு உதவுகிறது. குறிப்பாக சிலர் குளிக்கவில்லை என்றாலும், இந்த வாசனை திரவியங்களைப் பயன்படுத்தியே காலத்தை கழிக்கின்றனர். வேகமாக ஓடும் காலத்தில் குளிப்பதற்கே நேரமில்லையாம். அதற்குதான் இந்த வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம்.
சரி விஷயத்திற்கு வருவோம். இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாசனை திரவியங்களில் எவ்வளவு ஆபத்துக்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
பிரபலமான வாசனை திரவியங்கள், நெயில் பாலிஷ்கள் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் பொதுவாகக் காணப்படும் பித்தலேட்டுகள் எனப்படும் ரசாயனங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
இந்த பித்தலேட்டுகள் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பேக்கேஜிங்கிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பித்தலேட்டுகள் இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் குழந்தைகளில் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு தீங்கு விளைவிக்கும். இளம் பருவத்தினரிடையே அதிக அளவு பித்தலேட்டுகள் ஹைபராக்டிவிட்டி அபாயத்தை 25% அதிகரித்துள்ளதாக JAMA ஆய்வு கண்டறிந்துள்ளது.
அதே குழு குழந்தைகளிடையே இது எப்படி பாதிக்கிறது என்பதையும் கண்டறிந்தது. இந்த பித்தலேட்டுகள் உள்ள ரசாயனங்களை பயன்படுத்தும் குழந்தைகள் கணிதம் போன்ற பாடங்களில் மோசமாக செயல்படுகின்றனர். பித்தலேட்டுகள் நாளமில்லா அமைப்பை சீர்குலைத்து, நமது வளர்ச்சியிலிருந்து இனப்பெருக்க ஆரோக்கியம் வரை அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களைப் பாதிக்கும் என்று ஆய்வுகள் சுட்டி காட்டுகின்றன.
இந்த நாளமில்லா அமைப்பு நமது உடலின் செயல்பாட்டை சமநிலையை வைக்க உதவுகிறது. தைராய்டு மற்றும் பிட்யூட்டரி போன்ற சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் வளர்சிதை மாற்றம், மனநிலை மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துகின்றன.
இந்த நாளமில்லா சிதைவுக்கு பித்தலேட்டுகள் காரணமாகின்றன. இந்த பாதிப்பு அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துமாம்.
இந்த வேதிப்பொருட்கள் விந்து அல்லது முட்டை செல்களை சீர்குலைத்து, பிறக்காத குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments