
தென்மேற்கு சீனாவின் கிராமப்புற சோங்கிங் பிரதேசத்தின் பசுமையான நிலப்பரப்பில் காணப்படும் இது, விண்ணிலிருந்து கீழே நோக்கினால் ஆழமான, கருமையான வாயுக்கள் வரிசையாகத் தோன்றி, வேற்றுகிரகவாசிகளின் தடம்போன்றுள்ளது.
662 மீற்றர் ஆழம், 626 மீற்றர் நீளம் மற்றும் 537 மீற்றர் அகலம் கொண்ட,130 மில்லியன் கனமீற்றர் கொண்ட உலகின் மிகப்பெரிய மற்றும் மிக ஆழமான "மூழ்கிக் குழி" (Sinkhole) "சொர்க்கத்தின் கிணறு" (சியாவோஷாய் டியான்கெங்- Xiaoshai Tiankeng) என்றும் அழைக்கப்படுகின்றது. இது சீனாவிலுள்ள ஓர் அற்புதமான இயற்கை அதிசயமுமாகும்.
1994ல் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் இது எப்படி உருவானது என்பது நிபுணர்களால் கூட இதுவரை அறிந்துகொள்ள முடியவில்லை. இந்த மர்மமான வடிவங்கள் பூமியில் விழுந்த விண்கல்லின் விளைவுதானா என்று கூட சில ஊகித்து நிபுணர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

நீர் மற்றும் அரிப்பு சக்திகளின் மூலம் உருவாக்கப் பட்டதாக நம்பப்படும் இது, இயற்கையினது அபரிமிதமான சக்தியின் சான்றாக உள்ளது, மேலும் இது உலகிற்கு இயற்கையின் ஒரு உண்மையான சான்றும் அதிசயமுமாகும். ஒரு புவியியல் நிகழ்வு மட்டுமல்லாது இது பலதரப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பையும் கொண்டுள்ளது.
சிங்க்ஹோலின் தனித்துவமானது பலவிதமான தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்த்து, இவ்விடத்தை ஒரு உயிரியல் பொக்கிஷமாக மாற்றுகிறது. நிலத்தடி ஆறுகளில் நீர் கசிந்து அதன் பயணத்தில் சுற்றியுள்ள சுண்ணாம்புப் பாறை இயற்கையாகவே செதுக்கப்பட்டுள்ளதால், 128,000 ஆண்டுகளில் அவை படிப்படியாக உருவாகியிருப்பதாகவும் சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
அதன் மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சங்களில் ஒன்றான 8.5 கிலோ மீற்றர் நீளமுள்ள நிலத்தடி நதி அதன் ஆழத்தின் வழியாகப் பாய்ந்து கண்கவர் நீர்வீழ்ச்சியுடன் முடிவடைவதாகும்.

இந்த நிலத்தடி ஆறும் நீர்வீழ்ச்சியும் மூழ்கும் குழிக்குள் ஒரு மர்மமான, அமைதியான சூழலை உருவாக்கி, அதன் சிறப்பை பார்வையாளர் களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அனுபவிக்க வைக்கின்றது.
மழைக்காலத்தில், இது மேலும் வியத்தகு முறையில் மேம்படுகின்றது. உயரமான பாறைகள், பசுமையான தாவரங்கள் மற்றும் விழும் நீரின் இடியுடன் கூடிய சத்தம் ஆகியவற்றின் கலவையானது ஒரு மூச்சடைக்கக்கூடிய காட்சியை உருவாக்குகிறது.
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments