உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படும். ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும். முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் என பலரின் அசைவுகளும் காண்போரை கவரும்.
அதையெல்லாம் தன் வசீகர தோற்றத்தால் அள்ளி ஒரு ஓரமாக வைத்துள்ளார், மோனலிசா. மத்தியப்பிரதேச மாநில இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே, மகா கும்பமேளா விழாவில் பாசி, ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றைத் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விற்று வந்தார். கும்பமேளாவில் கூட்டம் கூடும், நல்ல வருமானம் கிடைக்கும் என நினைத்திருந்த மோனலிசாவிற்கு கேட்டது ஒன்று. ஆனால் கிடைத்தது ஒன்று.
பாபாக்கள், அகோரிகளுக்கு நடுவே மோனலிசா பாசி மாலைகள் விற்றதை யூடியூபர் ஒருவர் ரீல்ஸ் எடுத்து அப்லோடு செய்துள்ளார். யார் இவர்? எங்கிருக்கிறார்? என பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கினர். கையில் கேமிராவுடன் புறப்பட்ட யூடியூபர்கள், போட்டோகிராபர்கள் கும்பமேளாவில் இருந்த மோனலிசாவை இன்டர்வியூ எடுத்தும், வீடியோ பதிவு செய்து அப்லோடு செய்து வந்தனர்.
அதன் விளைவாக தன்னை தேடி பலரும் அலைந்ததால் புன்னகையில் மூழ்கிய மோனலிசாவிற்கு நாளடைவில் அதுவே ஆபத்தாக மாறியது. மோனலிசாவை சுதந்திரமாக சுற்ற விடாமல். சுற்றி வளைத்து செல்பி எடுத்து டார்ச்சர் செய்தனர். இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளான மோனலிசா கருப்பு நிற மாஸ்க்கை அணிய தொடங்கினார்.
இருப்பினும் அவரது கண்கள் அவரை காட்டி கொடுக்காமல் மறைத்து வைக்க, தவறிவிட்டது. தூங்கி எழுந்ததும் பேட்டி எடுத்து விடலாம் என மோனலிசா தங்கியிருந்த கூடாரத்தை தேடியும் கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர். மோனலிசாவை மட்டுமல்லாது அவரை போல பாசி மாலை விற்கும் பல பெண்களையும் அது சிரமத்திற்கு உள்ளாக்கியது.
முகத்தை மறைத்து யார் சென்றாலும் விலக்கிப் பார்த்து முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்களும் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் பாசி மாலை விற்க செல்லும் போது மோனலிசாவிற்கு போலீஸார் பாதுகாப்பு கொடுக்கும் அளவிற்குச் சென்றது. கண்களால் வசீகரிக்கச் செய்தவர் கண்ணீர் விட்டு கதற ஆரம்பித்தார். நடப்பதைப் பார்த்து மோனலிசாவின் குடும்பத்தினர் உடைந்து போனார்கள்.
மகளின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்து என்பதை உணர்ந்தவர்கள், அவரை இரவோடு இரவாக பேருந்தில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். யூடியூபர்கள் எல்லைமீறாமல் இருந்திருந்தால் கும்பமேளாவில் மோனலிசாவின் பாதம் இன்னும் சில நாட்கள் நடைபோட்டிருக்கும்.
இதனிடையே பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் தயாராக உள்ள அடுத்த படத்தில் 16 வயதே ஆன மோனலிசா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
news18
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments