கம்பளை இலங்கம்வத்தையில் "அல்-மிஸ்பாஹிய்யா" என்ற பெயரில் 1999ம் ஆண்டில் ஆரம்பமான அறபுக் கல்லூரி இன்றைய தினம் தனது வெள்ளி விழாவை வைபவ ரீதியாகக் கொண்டாடுகின்றது.
22 மாணவர்கள் அல்-ஹாபிழ்களாகவும், ஆறு மாணவர்கள் அல்-ஆலிம்களாகவும் சான்றிதழ் பெறுகின்றனர்.
2025, ஜனவரி 19ம் திகதியாகிய இன்றைய தினம் அல்-ஹாஜ் அப்துல் ராஸிக் அவர்களின் தலைமையில் நடைபெறும் வைபவத்தில் விஷேட சொற்பொழிவாளராக சென்னை, ஜாமிஆ அல்ஹுதா அறபுக் கல்லூரியின் முதல்வரும், அடையார் குர்பானி பீர் மஸ்ஜிதின் தலைமை இமாமுமான கலாநிதி எம். ஸதீதுத்தீன்(பாகவி) அவர்கள் உரை நிகழ்த்துகின்றார். அதனைத் தொடர்ந்து வெலிகமை பாரி அறபுக் கல்லூரி அதிபர் அப்துர் ரஹ்மான்(மழாஹிரி) அவர்களின் உரை இடம்பெறும்.
வைபவத்தில் பிரதம அதிதியாக கம்பளை-மஹஜன சுபர் மற்றும் மஹஜன ஹைபர் மார்ட் உரிமையாளர் அல்ஹாஜ் நஸார் உடையாரும், ரிஸானா ஜெம்ஸ் அண்ட் ஜுவலரி உரிமையாளர் அல்ஹாஜ் இம்தியாஸ் அவர்களும் கலந்து சிறப்பிப்பர்.
அல்-ஆலிம், அல்-ஹாபிழ்களாக கம்பளையைச் சேர்ந்த எம்.ஆர்.எம். ஸாஜித், எம்.ஏ.உமர், ஹபுகஸ்தலாவையைச் சேர்ந்த ஏ.ஆர்.முஹம்மத், கெலிஓயாவைச் சேர்ந்த எம்.என்.எம். ஹனீப், வவுனியாவைச் சேர்ந்த எம்.எப்.எம்.பயாஸ் மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்த எம்.எப்.அதீக் ஆகியோர் சான்றிதழ் பெறுகின்றனர்.
பின்வரும் மாணவர்கள் அல்- ஹாபிழ் சான்றிதழ் பெறுவோராவர்:
ஆர்.எஸ்.அப்துர் ரஹ்மான்-கெலிஓய,
எம்.எச்.முஹம்மத் ஹாபிழ்-ஹெம்மாத்தகம,
எம்.இஸட்.முஹம்மத் பஸ்லான்-தெஹியங்க,
எம்.ரீ.முஹம்மத் இர்ஹாம்-மஹியங்கனை,
எம்.எம்.முஹம்மத்-கொரகோய,
எம்.ரிஸ்வான் உமர், எம்.என்.உஸாமா-ஹட்டன்,
ஏ.முஹம்மத் ஜிப்ரி, எம். பௌமி அக்ரம்-தெல்பிடிய,
எம்.இர்ஷாத் முஹம்மத்-உலப்பனை,
எம்.எப்.முஹம்மத் பவாஸ்-நாவலபிடிய,
எம்.ஆர்.எம்.ரயான்-இலங்கம்வத்த,
எம்.ஆர்.அஹ்மத்-கம்பளை,
எம்.எஸ்.லுக்மான் ஹகீம்-ஹிஜ்ராகம,
ஏ.என்.முஹம்மத் நவீத்-மஹியங்கன,
எம்.யூ.ஆதிப்-மாவனல்லை,
எம்.எம்.எம்.ருஷ்தி-முறுதலாவ,
எம்.எல்.ஹைதர் அலி-வத்தளை,
எம்.எம்.அர்ஷாத்-தோப்பூர்,
எம்.ஐ.எம்.நபீல்-மாத்தளை,
ஏ.ஏ.ஆஷிப் அஹ்மத்-ஹப்புத்தளை.
அகில இலங்கை ரீதியாக மாணவர்களை உள்வாங்கி, மிகவும் சிறப்பான முறையில் அவர்களுக்கு சன்மார்க்கக் கல்வியூட்டி ஹாபிழ்களையும், ஆலிம்களையும் உருவாக்கிவரும் கம்பளை இலங்கம்வத்தை அல்-மிஸ்பாஹிய்யா கலாசாலையின் வளர்ச்சிக்கு எமது வாழ்த்துக்கள்!
செம்மைத்துளியான்
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments