Ticker

6/recent/ticker-posts

Ad Code



எங்களுக்கு பல உதவிகள் செய்தது திராவிட இயக்கங்களே- சீமானின் கருத்துக்கு புலிகள் அமைப்பின் நிர்வாகி கண்டனம்


நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் பெரியார் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகியும் சீமான் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் அமைப்பின் நிர்வாகி கஜன், ஈழ போருக்கு பின்னர் பிரான்சில் வசித்து வருகிறார். இவர் தற்போது ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை, போர்க் குற்றங்களைப் படக்காட்சிகளாக அந்தந்த நாட்டு மொழி விளக்கங்களோடு ஐரோப்பா முழுவதும் தொடர்ந்து பரப்பி வருகிறார்.

இவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட காணொளியில், "தந்தை பெரியார் குறித்த சீமானின் கருத்துகள் வேதனையளிக்கிறது. இனியும் நாங்கள் கண்ணை மூடி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நெருக்கடிகளுக்கு மத்தியில் எங்களுக்கு பல உதவிகள் செய்தது திராவிட இயக்கங்கள்தான்.

சீமானின் கருத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சீமானின் கருத்துக்கள் ஈழ விடுதலைக்கான ஆதரவை அழித்து விடும். எங்களுக்கு தமிழ்நாட்டில் அனைவரும் ஆதரவும் மிகவும் முக்கியம். சீமான் இதுபோன்ற கருத்துக்களை இனி தெரிவிக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனோடு உடன் இருந்த புலிகள் அமைப்பின் நிர்வாகி கஜன் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதரவாளர்களைப் பிரபாகரனைச் சந்திக்க வைக்கும் பொறுப்பை வகித்தவர் என்பதும், போர் முனையில் வைகோவை அழைத்துச் சென்று பாதுகாப்பாக திருப்பி அனுப்பியவர் கஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kalaignarseithigal




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments