தேவைப்பட்டால், அமெரிக்கா உதவியுடன் போரை மீண்டும் தொடங்குவதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது” என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுப்பதற்காக, இஸ்ரேல் மந்திரி சபை, சனிக்கிழமை (18) அதிகாலை கூடியது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான ஒப்பந்ததுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (19) காலை போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் அமுலுக்கு வர சில மணி நேரங்களே உள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
“ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டபடி விடுவிக்கப்படவுள்ள பணையக்கைதிகளின் பட்டியலை வெளியிடாதவரை இதை (ஒப்பந்தம்) நாம் முன்னெடுத்து செல்ல முடியாது. ஒப்பந்தத்தில் விதி மீறல் இருந்தால் அதை இஸ்ரேல் சகித்துக்கொள்ளாது. ஹமாஸ் மட்டுமே இதற்கு முழு பொறுப்பு" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தொலைக்காட்சியில் உரையாற்றிய நெதன்யாகு,
“தேவைப்பட்டால் அமெரிக்கா உதவியுடன் போரை மீண்டும் தொடங்குவதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. பணையக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவதை நான் உறுதி செய்வேன்" என்றார்.
tamilmirror
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments