Ticker

6/recent/ticker-posts

Ad Code



மொசாட் அதிகாரிக்கு இஸ்ரேலில் உயரிய பதவி!


இஸ்ரேலின் நீண்டகால உளவுத்துறை(Mossad) அதிகாரியான இலன் ரோமை( Ilan Rom) நிதியமைச்சகத்தின் இயக்குநராக அந்நாட்டு அரசாங்கம் நியமித்துள்ளது.

அமைச்சகத்தின் உயர்மட்ட சிவில் ஊழியரான ரோம், இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை நிறுவனமான மொசாட்டில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

"நமக்கு முன்னால் உள்ள பணிகள் சவாலானவை. வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும் வளர்ச்சி இயந்திரங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த நீண்ட மற்றும் கடினமான போரின் போது அரசின் பொருளாதார வளர்ச்சிக்கு எனது அனைத்து முயற்சிகளையும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

காசா மீதான இஸ்ரேலின் 15 மாத காலப் போர் பெரும் சவாலானது.

காசா மற்றும் லெபனானில் இராணுவ மோதல்கள் காரணமாக இஸ்ரேலின் பொருளாதாரம் பலவீனமடைந்துள்ள நேரத்தில், போர்களுக்கான செலவினங்கள் 2024 இல் சுமார் 25 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.

இவ்வானாறான  நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இஸ்ரேலின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

tamilwin


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments