
உலகின் மிகப்பெரிய நதி அமேசானாகும். இது தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது, அதன் நீளம் மற்றும் நீர் ஓட்டத்தின் அடிப்படையில் இது உலகின் மிகப்பெரிய நதியாகக் கருதப்படுகிறது. இது நைல், யாங்சே மற்றும் மிசிசிப்பி நதிகளை விட அதிக நீரைக் கொண்டுள்ளது, மேலும் பூமியிலுள்ள திரவ நன்னீரில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. பூமியிலுள்ள மிகப்பெரிய இயற்கை படைப்புகளில் இதுவும் இந்நதியும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
அமேசான் உலகின் மிகப்பெரிய நீர்நிலைகளைக் கொண்டுள்ளது. அது சுமார் 7.4 மில்லியன் சதுர கிலோமீற்றர்கள், பிரேசில் வழியாகச் செல்லும் பகுதி மட்டுமே இதில் அடங்கும்.
2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் பிரேசிலிய மற்றும் பெருவியன் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் இது உலகின் மிக நீளமான நதி என்பதைக் காட்டுகிறது. இதன் நீளம் தோராயமாக 7000 கிலோ மீற்றர்களாகும்.
அதன் கீழ் பகுதியில் ஆற்றின் அகலம் 1.6 முதல் 10 கிமீ வரை இருக்கும். அது 240 கி.மீ அகலம் கொண்ட அகன்ற முகத்துவாரத்தின் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலில் நுழைகிறது.
இந்த முகத்துவாரத்தின் வழியாக, பலமான நீர் ஓட்டம் கடலில் சேர்வதால், முகத்துவாரத்திலிருந்து 150 கி.மீற்றர் வரை, கடல் நீரின் கலவை, நன்னீர் மற்றும் உப்பு நீருக்கு சமமாக உள்ளது.

இது உலகின் மொத்த நதி நீர் ஓட்டத்தில் 20% க்கும் அதிகமாக வழங்குகிறது. அமேசான் நதியின் நீர் ஓட்டம் வினாடிக்கு சுமார் 209,000 மில்லியன் கன மீற்றர்களைளச் சுமந்து செல்கின்றது. அமேசான் நதியும் அதனோடினைந்த வனாந்திரங்களும் உலகின் மிக அதிக பல்லுயிர் மண்டலங்களில் ஒன்றாகும். அதன் நீர் மற்றும் காடுகளில் ஆயிரக்கணக்கான விலங்குகள் வாழ்வதோடு, தாவரங்களும் செழித்து வளர்கின்றன.
அமேசான் நதி பெருவின் ஆண்டிஸ் மலையில் உருவாகி, பிரேசில் வழியாக பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் பாய்கிறது. அதன் நீளம், நீர் ஓட்டம் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவை அமேசான் நதியை உலகின் மிகப்பெரிய நதியாக அங்கீகரிக்க பெரிதும் உதவுகின்றன.
ஆற்றின் அகலம், ஆழம், பெரும் அளவிலான நீரோட்டம், வெள்ளப்பெருக்கு, ஆற்றின் போக்கில் அடிக்கடி தடம் மாறுதல் போன்ற காரணங்களால்,அமேசான் ஆற்றில் பெரிய பாலங்கள் கட்ட முடியவில்லை என்று கூறப்படுகின்றது.
அமேசான் நதி, இயற்கை நெடுஞ்சாலையாக,பயணிகள் படகுகள் மற்றும் பெரிய சரக்குக் கப்பல்கள் போக்குவரத்து பெருமளவில் நடைபெறுகின்றது. அதன் கரையிலுள்ள 'மனாஸ்' மற்றும் 'பெலேம்' நகரங்களில் ஆற்றைக் கடக்க படகுகள் பாலங்களாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன. செம்மைத்துளியானின் "புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா" காவியத்தில் 'மனாஸ்' நகரம் கதைக்களமாகக் கொள்ளப்பட்டுள்ளது.

அமேசான் மழைக்காடுகளுக்குள் வெளி உலகத்துடன் தொடர்பில்லாத ஏறத்தாழ 100 பழங்குடியினர், பண்டைய மரபுகளைப் பாதுகாத்து, தங்கள் சுற்றுச்சூழலைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
வெளியாட்களுடன் தொடர்பு கொள்வது வன்முறை மற்றும் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்தும், நோய் பரவாமல் தடுப்பதற்காகவும் அவர்கள் தனிமைப்பட முடிவு எடுத்திருக்கலாம்.
இந்த பழங்குடியினர் காடுகளுடன் மிகவும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர், தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றிய தனித்துவமான மற்றும் தலைசிறந்த புரிதலை அவர்கள் கொண்டுள்ளார்கள்.
அவர்களின் வாழ்க்கை முறை குறிப்பிடத்தக்கதும், பாதிக்கப்படக்கூடியதுமாகும். ஜலதோஷம் போன்ற பல பொதுவான நோய்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால், வெளி உலகத்துடனான எந்தவொரு தொடர்பும் பேரழிவை ஏற்படுத்தும் என அவர்கள் நம்புகின்றனர்.
அவர்கள் உலகத்துடன் ஒன்றிணைவது பாரம்பரிய நாகரிகக் கருத்துக்களுக்கு சவால் விடுவதால், அவர்கள் என்றென்றும் மறைந்திருந்து வாழ்வது அந்தக் காடுகளின் பாதுகாப்பிற்கு ஒரு காரணமாக அமைந்தது.

செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments