Ticker

6/recent/ticker-posts

Ad Code



இதெல்லாம் டூ மச்.. ஆனாலும் சரிவிலிருந்து மீண்டு நாங்கள் வெற்றிபெற இதுவே காரணம் – சூரியகுமார் மகிழ்ச்சி


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான புனே மைதானத்தில் நடைபெற்று முடிந்த நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்ததோடு 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 53 ரன்கள் குவித்து அசத்தினர்.

அதன் பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன சூரியகுமார் யாதவ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவை இந்த போட்டியின் போது வழங்கி இருந்தார்கள்.

இந்த போட்டியின் ஆரம்பத்தில் 10 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர். ஒரே ஓவரில் மூன்று விக்கெட் விழுவதெல்லாம் கொஞ்சம் டூ மச் தான் இருந்தாலும் அனுபவ வீரர்களான ஷிவம் துபே மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் அவர்களது அனுபவத்தை இந்த போட்டியில் வெளிக்காட்டி இருந்தனர்.

மேலும் அவர்களது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே எங்களால் ஒரு நல்ல ஸ்கோரை நோக்கி நகர முடிந்தது. இந்த போட்டியில் அடைந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

crictamil


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments