Ticker

6/recent/ticker-posts

Ad Code



கடந்த 10 வருஷத்துல இப்படி ஒரு ஆட்டத்தை நான் பார்த்ததில்லை.. 3 இந்திய வீரர்களை பாராட்டிய – அஷ்வின்


இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது முதல் நான்கு போட்டிகளின் முடிவில் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதை அடுத்து டி20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் இருந்து வருகிறார்.

அவரது தலைமையில் இந்திய தொடர்ந்து வெற்றிகளை குவித்தும் வருகிறது. இப்படி இந்திய அணியை வெற்றிகரமாக நடத்தி வரும் அவரது கேப்டன்சி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. அதோடு இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணி முற்றிலும் வித்தியாசமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இப்படி டி20 கிரிக்கெட்டின் வடிவத்தையே அதிரடியாக மாற்றியுள்ள இந்திய அணியின் செயல்பாடு அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடைசியாக புனே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

அந்த போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடியிருந்தனர். இந்நிலையில் அவர்களது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பாராட்டி பேசிய அஷ்வின் கூறுகையில் :

இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவாக வெளியேறியும் இதுபோன்ற ஆடுகளங்களில் 181 ரன்கள் அடிப்பதெல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் நடந்ததே இல்லை. ஆனால் தற்போதுள்ள பாண்டியா, துபே, ரிங்கு சிங் ஆகியோர் பாராட்டப்பட வேண்டிய வீரர்கள். சூழலுக்கு ஏற்றவாறு மரியாதை கொடுத்து பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.

நீண்ட காலமாக இந்திய அணிக்கு சிக்ஸ் ஹிட்டர்கள் இல்லாமல் இருந்த வேளையில் தற்போது நிறைய அதிரடியான முறையில் சிக்ஸ் அடிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளார்கள் என்றும் இந்திய டி20 அணியின் எதிர்காலம் மிகச் சிறப்பாக உள்ளது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments