Ticker

6/recent/ticker-posts

107க்கு ஆல் அவுட்.. 2 – 0.. ஆஸியை தெறிக்க விட்ட இலங்கை.. 1985 இந்தியாவை முந்தி பெரிய சாதனை வெற்றி


இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற இலங்கை ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி பிப்ரவரி 14ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு பதும் நிசாங்கா 6 ரன்னில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக குசால் மெண்டிஸ் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் நிசன் மதுசங்கா நிதானமாக விளையாடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் 51 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அடுத்ததாக வந்த கமிண்டு மெண்டிஸ் 4 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய குசால் மெண்டிஸ் அபாரமான சதத்தை அடித்து 101 (115) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக விளையாடிய கேப்டன் அசலங்கா அதிரடியாக 6 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்டு 78* (66) ரன்களும் லியானகே 32* (21) ரன்களும் விளாசி ஃபினிஷிங் செய்தனர். அதனால் 50 ஓவரில் இலங்கை 281-4 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவுக்கு பென் துவார்சுய்ஸ், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், அடம் ஜாம்பா தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். பின்னர் 282 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவை ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசி மடக்கிய இலங்கை 24.2 ஓவரில் 107 ரன்களுக்கு சுருட்டி வீசியது. டிராவிஸ் ஹெட் 18, ஜேக் பிரெசர்-மெக்குர்க் 9, கேப்டன் ஸ்மித் 29, ஜோஸ் இங்லிஷ் 22, மேக்ஸ்வெல் 1 என முக்கிய வீரர்கள் யாருமே பெரிய ரன்கள் எடுக்கவில்லை.

இலங்கைக்கு அசிதா பெர்னாண்டோ 3, வெல்லாலகே 4, ஹஸரங்கா 3 விக்கெட்டுகளை எடுத்து அட்டகாசம் செய்தனர். அதனால் 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களது பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2006இல் இதே கொழும்புவில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை.

மேலும் ஆசியக் கண்டத்தில் ஆஸ்திரேலியாவை குறைந்தபட்ச ஸ்கோருக்கு சுருட்டிய அணி என்ற சாதனையையும் இலங்கை படைத்துள்ளது. இதற்கு முன் 1985இல் சார்ஜாவில் ஆஸ்திரேலியாவை 139 ரன்களுக்கு இந்தியா சுருட்டியதே முந்தைய குறைந்த ஸ்கோர். அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இலங்கை டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. மறுபுறம் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் தொடருக்கு தகுதி பெறாத இலங்கையிடம் ஆஸ்திரேலியா பரிதாபமாக தோற்றது.

crictamil

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments