Ticker

6/recent/ticker-posts

மெக்சிகோ அதிபர் கிளவ்டியா, Google நிறுவனம் மீது கடும் கண்டனம் ;வழக்குத் தொடரப்போவதாக எச்சரிக்கை!


Google தளத்தில் மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றியதற்கு அதிபர் கிளவ்டியா  கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள அதேவேளை Google நிறுவனம் மீது வழக்குத் தொடுக்கப்போவதாகவும்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாக உத்தரவுக்கு இணங்க Google நிறுவனம் அந்த மாற்றத்தைச் செய்ததாக தெரிவித்துள்ளது..

அமெரிக்க பயனீட்டாளர்களுக்காகக் Google தளத்தில் மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

வளைகுடாவின் ஒரு பகுதி அமெரிக்காவுக்குச் சொந்தம்.

அந்தப் பகுதியை மட்டும்தான் டிரம்ப்பின் உத்தரவு அமெரிக்க வளைகுடா என்று குறிப்பிடுகிறதே தவிர ஒட்டுமொத்த வளைகுடாவையும் அல்ல என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்காவுக்கு வெளியில் உள்ள இதர நாட்டுப் பயனீட்டாளர்கள் வளைகுடாவுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயரையும் மாற்றப்பட்ட பெயரையும் பார்க்கமுடியும் என்று Googleதெரிவித்துள்ளது..



 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments