Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-179


குறள் 639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

பக்கத்துல இருந்து கிட்டே அரசனுக்கு கெடுதல் வாரமாதிரி யோசனை சொல்லுத ஒரு அமைச்சரைக் காட்டிலும், எழுவது கோடி எதிரிங்க இருக்கது எம்புட்டோ மேல். 

குறள் 640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.

என்னத்த தான் முன்னக் கூட்டியே திட்டம் போட்டு வச்சிருந்தாலும், திறமை இல்லாத ஒருத்தனால அதை அரைகுறையாகத்தான் செய்ய முடியும். 

குறள் 641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

வாய்த் திறமைங்கிறது  ஒருத்தங் கிட்ட இருந்துச்சு ன்னா, அது ரொம்ப சிறப்பு. இருக்க நல்லதுலயே சிறந்தது அது தான். 

குறள் 644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.

எதைச் சொன்னாலும் சரி.. அதைப்பத்தி நல்ல தெளிவா தெரிஞ்சுகிட்டு சொல்லணும். அப்படிச் சொல்லுத சொல்லை விட சிறந்த அறமும்,  உண்மையான பொருளும், வேற எதுவும் கெடையாது. 

குறள் 648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

எவன் ஒருத்தன் தான் சொல்லவேண்டிய கருத்தை வரிசையா தெளிவா சொல்லுதானோ அவன் கொடுக்க வேலையை, ஊர்க்காரங்க வெரசலா செஞ்சு முடிச்சிருவாங்க.

(தொடரும்)

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments