Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-52


ரங்குவின் வீட்டில் மயான அமைதி நிலவியது. அவனும் தாயும் தங்களது ஜாகைக்குள் ஒதுங்கியவர்களாக தமக்குள் துயரப்பட்டுக் கொண்டிருந்தனர். கணவர் மரணமானதைத்  தொடர்ந்து ரங்குவை நற்பாதையில் கொண்டு செல்லாதது அவளது தவறென்பதை இப்போதுதான்   ரங்குவின் தாய் உணர்கின்றாள்!

தனது தந்தை உயிரோடிருந்த காலத்தில் அவரது 
வழிகாட்டலில், வனத்துக்குள் சென்று மரமேறி “தெல்லிஜை” இறக்கி தமது குடும்ப வாழ்க்கை ஓட்ட உதவியவன்  சோம்பேரித் தனமான “குவாரணி” இனத்தவர் தொடர்பினால் குடிப்பழக்கத்திற்கு ஆளானான்!

தாய் தன்னாலான அறிவுரைகளைக் கூறி அவனைத் திருத்த முயன்றபோதிலும் அது கைகூடவில்லை.

அவனால் இப்பொழுது அவள் தன் அண்ணனையும், குடும்ப உறவுகளையும் இழந்து தனி மரமாகிவிட்டதை நினைத்தும், தன் மகன் துயரப்பட்டுக் கொண்டிருப்பதை நினைத்தும் தன் ஜாகையின் மூலை ஒன்றில் ஒதுங்கி யிருந்து, கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்!
அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது!  தனக்குள்ளேயே அழுதுகொண்டிருந்த அவளால் அதனைத் தொடர்ந்தும் அடக்கிக் கொள்ள முடியாமல் குமுறி அழுதுவிட்டதும், ரங்குவால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமற் போய்விட்டது!





மற்றொரு மூலையில் ஒதுங்கியிருந்து தனக்குள்ளேயே கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவன், முரட்டுத் தனமாக எழுந்து நின்றான்! அங்கவஸ்தியை இறுக்கிக் கட்டிக்கொண்டான். ஜாகை முகட்டில் சொருவி வைக்கப்பட்டிருந்த கத்தியை  எடுத்து இடையில் சொருவிக்கொண்டான்!

ஜாகையை விட்டும் வெளிறேப் போனவனை - தாய் தடுத்து நிறுத்த முற்பட்டாள். எவ்வளவு முயற்சித்தும் அவன் கேட்பதாக இல்லை! அவளைக் கதற விட்டுவிட்டு அவன் அங்கிருந்து காததூரம் போய்விட்டான்!

முரட்டுத்தனமான அவன் குடிகாரன் மட்டுமல்ல 
அறிவுகெட்டவனும் கூட. அதனால் துணிந்து எதையும் செய்துவிடுவான் என்ற பயம் அவனது தாய்க்கு ஏற்பட்டது!

தாய் ரெங்க்மாவின் ஜாகையை நோக்கி ஓடினாள்.
தலைவிரி கோலத்தில் ரங்குவின் தாயைக் கண்ட சொர்யா திகைத்து நின்றாள்!

ரங்கு கோபமாகக் வனத்துக்குள் சென்ற செய்தியை அவள் அவர்களிடம் குறிப்பிட்டபோது, ரெங்க்மாவின் தந்தையின் தலையில் அனல் பறந்தது!

அடுத்த கணம் அவர் தன் வில்லைத் தோலில் மாட்டிக் கொண்டு, அம்புகளை இடையில் சொறுவிக் கொண்ட வராக வனத்தை நோக்கி விரைந்தார்.

(தொடரும்)

செம்மைத்துளியான்

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments