Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

இசைந்தாடும் கிளைகள் நாம்!


காற்றில் அசைந்தாடும் 
மரக்கிளை இலைகளைப்
போன்றே 
மனித நாவசைத்திடும் 
வார்த்தைக்கு கேட்கும் 
செவிப்புலனில் வழியாய் 
நெஞ்சினுள் ஊடுருவிடும் 
போது எம்முள்ளும் ஓர் 
இசைவாக்கம் 
நிகழத்தான் செய்யும் 

மெல்லிய காற்றில் 
மெதுவாகவும் 
புயல் காற்றில் முறியும்
கிளைகள் போன்றே
 நாமுமாகி போகிறோம் 

அன்பாய் வரும் 
வார்த்தையில் அடங்கியும் 
பண்பாய் வரும் 
வார்த்தைக்கும் நெகிழ்ந்து 
பயமுறுத்தும் சொல்லுக்கு 
உள்ளதிர்வில் உழுக்கியுமென 
அசைவிற்கேறேறு 
இசைந்தே விடுகிறோம் 

யார் சொன்னது 
நடிகர்களுக்கு தான் 
நடிப்பு வருமென்று 
அவர்கள் காட்சிக்கு 
உருவமைக்கிறார்கள் 

உருவமைத்த காட்சியில் 
நடித்துக்கொண்டே 
காட்சிப்படுத்திக்கொண்டே 
நகர்கிறோம் அவ்வளவுதான் 

எவ்வளவுதான் முடியுமோ 
அதற்கேற்றவாறே 
அசைவுகேற்ப 
இசைந்தே தீர்வோம் 

சஹ்னாஸ் பேகம்
முதலைப்பாளி

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments