
"நேராய் வெடித்ததே நேர்"

உருக்குலைந்தே உள்ள உருவம் இதுவோ
கருக்கலையக் காணும் காட்சி--
பெருங்கவலைக்
காறுதல் உண்டோ அவதிகள் தீராதோ
நூறாய் வெடித்ததே நேர்:
"உதயம் ஞாயிறென்றே"

எழுசீர் மண்டிலம்
புலர்ந்த காலை புதுமை நல்கிப்
பேறும் புகழும் தந்திடணும்
அலர்ந்த மலராய் அகிலம் எல்லாம்
அன்பைப் பகிர்ந்தே அளித்திடணும்
உலர்ந்த வறுமை உணர்ந்தே ஒன்றாய்
ஒழிப்போம் வாரீர் தோழர்காள்
பலவாய் உதயம் பகிர்தல் தருவான்
பகலோன் வருக "ஞாயிறென்றே"
திருக்குறள் தூதர்
தமிழறிஞர் "மு.க.அன்வர்பாட்ஷா"

மு.க.அன்வர்பாட்ஷா"அவர்களின்
அறுபதாண்டு திருக்குறள்த்
தொண்டின் மலரும்
நினைவினுக்கு வாழ்த்து"பா"
"நவகலையேஅன்வரிவர் நா"
(நேரிசை வெண்பா)
முப்பதாண்டின் முன்பே முனைந்தார் திருக்குறளை
இப்போதும் முன்னிருக்கை இன்பருக்கே--
தப்பாத்
தவத்தால் ஓயாத் தகைமுனிவர் குறள்நேயர்
நவகலையே "அன்வரிவர்"நா:
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments