
குறள் 649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
கொஞ்சமா பேசி நெறைய வெளக்கம் சொல்லத் தெரியாத பயலுவொதான், வள வள ன்னு சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பானுவொ.
குறள் 650.
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
தான் படிச்சு தெரிஞ்சுகிட்டதை அடுத்தவொ புரிஞ்சிக்கிறமாதிரி எடுத்துச் சொல்லத் தெரியாதவொளைப் பத்திச் சொல்லணும்னா, அவொள்ளாம் மணமே வராத பூங்கொத்து மாதிரின்னு தான் சொல்லணும்.
குறள் 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
எதாவது ஒண்ணு செஞ்சா அதுனால புகழும் வராது, நன்மையும் கெடைய்க்காதுன்னா, அந்த தூய்மையற்ற செயலை எந்தக் காலத்திலயும் செய்யவே கூடாது.
குறள் 654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
எல்லாத்திலியும் தெளிவா இருக்கவொள்லாம், எம்புட்டு தும்பம் வந்தாலும் சரி, எந்த தப்புத் தண்டாவுலயும் இறங்க மாட்டாவொ.
குறள் 657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
நெறைய கெட்ட பேர்லாம் வாங்கி, வசதியான பணக்காரனா வாழ்றதை விட, எம்புட்டு வறுமை வந்தாலும் நேர்மையா வாழ்றது மேல்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments