Ticker

6/recent/ticker-posts

ஒன்றுமில்லை!


நான் அழுது கொண்டிருந்தேன்
மனிதர் ஏன் அழுவதாக 
கேட்டதுமே பொய்யுறைத்தேன் 
ஒன்றுமில்லை என்று ..

எனது வலி தாங்க 
இயலாது தான் விழிகள் 
அழுதது சொன்னது இதயம் 

நான் கேட்க கூடாததை 
கேட்டு விடுவதால் தான் 
இந்நிலை என்றது செவி 

நாம் பேசும் போதும் 
கேட்கும் போதும் 
சிந்தையோடு கலந்தாலோசித்து 
பதில் உறைப்பது 
நலவாகும் ..என்றது நாவு 
விழிகளோ மௌனித்தது ..

சில நேரம் 
கட்டுபடுத்திக்கொள்ள 
முடியாது உடை பட்டு 
உடைபெறும் நீர்த்துளிகள் 
விழிகளில் அனுமதி 
கேட்பதில்லை ..

எல்லா நேரமும் 
எல்லோர் முன்னிலையிலும் 
சிந்திடும் வலித்துளிகளுக்கு 
மதிப்பற்று விடும் ..
கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்

சஹ்னாஸ் பேகம்

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments