
ஒரு வழியா வாங்கி முடித்துக் கை நிறையப் பைகளோடு திரும்பினார்கள்.
"அடியேய் இதைத் தூக்கித்து நடக்க முடியாது ஒரு ஆட்டோ பாருங்க போய் கண்ணை மூடித்து அள்ளி முக்கி முக்கித் தூக்கி கஸ்ரப் படாமல் பார்த்து அதில் ஏறுவோம்" என்றார் பாட்டி.
"ஓம் அக்கா முடியல ஆட்டோ பார்ப்போம்" என்ற சின்னவள் பையைக் கீழே வைத்து விட்டாள்.
எப்படியோ ஒரு ஆட்டோ கண்ணில் படவே கையைத் தட்டிக் கூப்பிட்டு ஏறி விரைவாகவே வீட்டுக்கு வந்து விட்டார்கள். இறங்கும் போதே மேரி அக்கா குரல் கொடுத்தார்.
"இப்போதுதான் வருகின்றீர்களா அப்போ நான் காணவே இல்லையே நானும் இப்போது தான்டி வந்தேன்" என்று போக்கா பொய் சொல்லாம சோடி போட்டு போனா எப்படி எங்க நினைப்பு வரும் நடிக்காதே" என்றாள் சின்ன மருமகள்.
சிறு புன்னகையோடு "ஓகோ உன்னைப் போல் என்னை எண்ணி விட்டாய் அடியேய் நான் வாலிப வயது இல்லடியம்மா நீ இப்படிக் கற்பனை பண்ணாதே" என்றார் மேரி அக்காவும் சிரிப்போடு.
இல்லம் நுழைந்ததும் வாங்கிய பொருட்களை மீண்டும் ரசிப்போடு பார்த்து விட்டு எடுத்து வைத்துக் கொண்டார்கள்.
"அத்த. சேலை பிடிச்சு இருக்கா கலர் எல்லாம்" எனக் கேட்டாள் சின்னவள்.
" ஆமாம் அம்மா இருவரும் எனக்குப் பிடிச்ச வண்ணத்திலே எடுத்துத் தந்திருக்கிங்க நல்லா இருக்குமா" என்றார் பாட்டி பேசிக் கொண்டே இருக்க பாடசாலை விட்டு பிள்ளைகள் வந்து விட்டார்கள். அவர்களும் தங்களுக்காகச் சொன்ன பொருட்களை வாங்கி வந்தீங்களா? என்று கேட்டுக் கொண்டே புத்தகப் பையை வைத்தார்கள்
"வாங்கியாச்சி போய் கை கால் கழுவி விட்டு வாங்க சாப்பிட பிறகு பார்க்கலாம்" என்றார் பாட்டி .
"சரி பாட்டி" என்றதுமே வேகமாய்ப் போனார்கள்.
சாப்பாடு முடிந்ததும் தங்களுக்காக வாங்கிய பொருட்களைப் பார்த்து விட்டு சந்தோசத்தோடு தாயைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்கள்.
"அப்போ எனக்கு இல்லையா" என்று பாட்டி கேட்டதும் அத்தனை பேரும் ஓடி வந்து முத்தம் கொடுத்து விட்டுக் கோர்வையாகச் சொன்னார்கள்.
"இந்த முத்தம் இரவைக்குக் கதை கூறவே பாட்டி" என்று.
"பாருடா கள்ளக் கூட்டம்" என்று பாட்டி கூறி சிரித்தார். பிள்ளைகள் பகுதி நேர வகுப்புக்குப் புறப்பட்டதும் இவர்கள் மூவரும் குட்டித் தூக்கம் போடத் தயாரானார்கள்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments