Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-81


410, வினா : துன்பம் ஒருவித நன்மையே எப்போது? 
விடை: நண்பரின் நட்பைக் குறித்து அறியலாம் 

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். (796) 

411. வினா : உண்மையான நண்பரை எவ்வாறு அறியலாம்? 
விடை: நமக்குத் துன்பம்  வரும் போது
 
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்(,796)

412. வினா :ஊதியம் எனப்படுவது எது?
விடை: அறிவிலாதவர் நட்பிலிருந்து விலகுவதே 

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்.
கேண்மை ஒரிஇ விடல்.(782)

413.ஒன்றைக் கொடுத்தும் விலக்கவேண்டியது எது?-
விடை: தீயோர் நட்பை
மருவுக மாசற்றார் கேண்மை ஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.(800)

414. வினா: நட்பிற்கு உறுப்பு எது) 
விடை : நண்பரின் உரிமையே ஆகும்

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன் 

(தொடரும்)


 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments