
இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி துவங்கியது. அந்தத் தொடரின் முதல் போட்டி நவி மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. அதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் குமார் சங்ககாரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ராயுடுவை 5 ரன்னில் அவுட்டாக்கிய லக்மல் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும் 10 ரன்னில் கிளீன் போல்ட்டாக்கினார். அதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்த நிலையில் 26-2 என இந்தியா மாஸ்டர்ஸ் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய குர்கீரத் சிங் 44 (32) ரன்கள் எடுத்து சரிவை சரி செய்தார்.
இந்தியா அதிரடி: அவருடன் ஜோடி சேர்ந்து மறுபுறம் மிரட்டலாக விளையாடிய ஸ்டுவர்ட் பின்னி மூன்று பவுண்டரி 7 சிக்சர்களை பறக்க விட்டு 68 (31) ரன்கள் குவித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து வந்த ஜாம்பவான் யுவராஜ் சிங் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31* (22) ரன்கள் விளாசி தம்முடைய திறமையை காட்டினார். அவருடன் மறுபுறம் சேர்ந்து விளையாடிய யூசுப் பதான் தம்முடைய ஸ்டைலில் முரட்டுத்தனமாக 3 பௌண்டரி 6 சிக்ஸருடன் 56* (22) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.
அதனால் 20 ஓவரில் இந்தியா மாஸ்டர்ஸ் 222-4 ரன்கள் குவித்து அசத்தியது. இலங்கைக்கு அதிகபட்சமாக சுரங்கா லக்மல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக பேட்டிங் செய்த இலங்கைக்கு உபுல் தரங்கா 10 ரன்னில் அவுட்டானார். ஆனால் கேப்டன் சங்ககாரா அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அதிரடி காட்ட முயற்சித்த லகிரு திரிமண்ணே 24 (17) ரன்னில் பவுண்டரி எல்லையில் யுவ்ராஜ் சிங்கின் அபாரமான தாவிப் பிடித்த கேட்ச்சால் அவுட்டானார். -
அபார கேட்ச்சுகளால் திரில்: அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அரை சதம் கடந்த சங்ககாரா 51 (30) ரன்னில் சச்சினின் சிறப்பான கேட்ச்சால் பெவிலியன் சென்றார். அதற்கடுத்ததாக வந்த டீ சில்வா டக் அவுட்டான நிலையில் குணரத்னே அதிரடியாக 37 (25) ரன்களில் அவுட்டானார். அதே போல பிரியன்ஜன் 17 ரன்னில் சச்சினின் அற்புதமான கேட்ச்சால் அவுட்டானார்.
ஆனால் அடுத்து வந்த உடானா வெறும் 7 பந்தில் 22 ரன்கள் தெறிக்க விட்டு அவுட்டானதால் இலங்கைக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அதை அபிமன்யு மிதுன் வெற்றிகரமாக வீசியதால் 20 ஓவரில் 218-9 ரன்களுக்கு இலங்கையை கட்டுப்படுத்திய இந்தியா மாஸ்டர்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் இர்பான் பதான் 3, வினைய் குமார் 2, அபிமன்யு மிதுன் 2, தவால் குல்கர்னி 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments