
ஆதியும், பகவனும் பல ஊர்கள் சென்று வாழ்ந்த வேளை, ஒரு சமயம் 'ஊற்றுக்காடு' எனும் ஊருக்கு வந்தடைந்து, அங்கு சிறிது காலம் தமது வாழ்க்கையை நடத்தினர்.
அங்ஙனம் அவ்வூரில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த வேளை ஆதி, பகவன் ஆகியோருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தன் முதல் குழந்தை என்பதால் மிகவும் அன்பு கொண்டு பாசத்தோடு அந்தப் பெண் குழந்தைக்கு 'உப்பை' எனப் பெயரிட்டு வளர்த்தனர். உப்பை தன் தாய் தந்தையரான ஆதி, பகவனின் அன்பான வளர்ப்பால் நலமாக வளர ஆரம்பித்தாள்.
இந்த நேரத்திலே, ஆதி. பகவன் ஆகியோர் வாழ்ந்த இல்லத்தின் அருகே வாழ்ந்து கொண்டிருந்த, துணி துவைத்து அதனால் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த வண்ணார் இனத்தைச் சேர்ந்தத் தம்பதியர் வெகு நாட்களாகக் குழந்தையில்லாமல் வேதனைப்பட்டார்கள்.
இவ்வேதனையைக் கண்டு, தாங்காது வேதனை அடைந்த ஆதியும், பகவனும், தம் பாசக் குழந்தையான 'உப்பை' யை, அவர்களுக்கு ஈந்து, அவர்களது மனக் குறையைப் போக்கி வாழ்த்தினர். உப்பையும் வண்ணாரிடத்திலே வளர்ந்தாள்.
இருப்பினும், தம் பாச மகளின் அருகிலேயே தாமும் வாழ நினையாமையினாலோ என்னவோ, ஆதியும் பகவனும், தாம் வாழ்ந்து கொண்டிருந்த 'ஊற்றுக் காடு' எனும் ஊரை விட்டு வேற்றூருக்குப் பயணம் செய்தனர்.
இவ்வாறு இவர்கள் பயணம் செய்த வேளை 'காவிரிப் பூம்பட்டினம்' வந்து சேர்ந்தனர். இங்கு சிறிது காலம் தமது வாழ்க்கையை நடத்தலாயினர்.
இங்கு இவ்வாறு வாழ்க்கை நடத்திய வேளை, ஆதி, பகவன் ஆகியோரின் அருந்தவப் பயனால் இரு பெண் குழந்தைகளை ஈன்றெடுத்தனர். இவ்விரு பெண்குழந்தைகளுக்கும் 'உறுவை’ என்று ஒரு பெண்குழந்தைக்கும் 'ஔவை' என்று ஒரு பெண்குழந்தைக்கும் பெயரிட்டனர்.
தனது முதல் குழந்தையான 'உப்பை'யை, குழந்தை இல்லாத ஒரு வண்ணார் குடும்பத்திற்கு தாரை வார்த்துக் கொடுத்ததைப் போல, தமது இரண்டாவது குழந்தையான‘உறுவை’யை, குழந்தைப் பேறின்றி வாடிக் கொண்டிருந்த ஒரு கள்வினைஞரான சான்றோர் குடும்பத்திற்குத் தாரை வார்த்துக் கொடுத்து அச்சான்றோரை வாழ்த்தி அருளினார்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments