Ticker

6/recent/ticker-posts

Ad Code



ராஜகுமாரியின் சுயம்வரம்-71


அவசர அவசரமாக வேலையை முடித்துக் கொண்டு மலிவுச் சந்தைக்குப் புறப்பட்டார்கள். ஒரு மணி நேரம் நடந்தாலே சந்தை தான். அது திங்கள் கிழமை மாத்திரம் போடுவது கொஞ்சம் விலை குறைவாகவும் புடிச்சவைகளை தேடி எடுத்திடவும் ஏதுவாய் இருக்கும். அதனால் இந்த வாய்ப்பை அவர்கள் தவற விடுவதில்லை.  அன்றும் அங்கே தான் புறப்பட்டார்கள். 

பாட்டியும் கூடவே ஒட்டிக் கொண்டார் வேடிக்கை பார்க்க.

அந்தப் பாதை நெடுகிலும் உள்ள அணைத்துப் பெண்களுமே முன்னும் பின்னுமாய் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது பாட்டி சின்ன மருமகளைப் பார்த்துச் சொன்னார் "உன்னைப் போல் இவர்களும் ஞாயிறு  வந்தாலே தூங்க மாட்டார்களோ பாரு எப்படி வேக நடை என்று எதை எடுக்க ஓடுகின்றார்களோ தெரியலையே" என்றார் பாட்டி சிரிப்போடு.

"அத்தைக்கு எல்லாமே புதுமை தான் அங்கே வந்து பாருங்க நீங்களும் இனிமேல் இப்படித்தான் ஓடி வருவிங்க" என்று சொல்லிச் சிரித்தாள்
பெரிய மருமகள்.

 "அது சரி ஏன் இந்த மேரிப் பொண்ணு வரவில்லை ஏதும் தெரியுமா" என்று கேட்டார் பாட்டி.

"அவங்க புருசனோடு போய்த்தாங்க அத்தை அவரும் ஏதோ வாங்க வேணுமாம் வீட்டுக்கு என்று இரவே சொன்னாங்க".என்றாள் பெரிய மருமகள்.  

"ஓகோ அது சரி அப்போ அங்கே பார்க்கலாம் போல" என்றார் பாட்டி.

"தெரியாது கூட்டம் அதிகம் அலை மோதும் அத்த பார்ப்போம்.  கண்டால் பேசுவோம் காணா விட்டால் நம் வேலையைப் பாருத்துத்துட்டு வருவோம்" என்றாள் சின்னவள் .
பாட்டியுடன் பேசிக் கொண்டே நடந்ததில் தூரம் தெரியவில்லை.  சந்தையை அடைந்து விட்டார்கள்.  

"அடி ஆத்தி இது என்னம்மா ஏதோ கோயில் திருவிழா போல் இருக்கு. எப்போதும் இப்படிக் கூட்டம் தானா மருமகளே"என்று ஆச்சரியத்தோடு கேட்டார் பாட்டி .

"ஆமாம் அத்த, விலை குறைவு, வாரத்தில் ஒரு தடவை அதனால் சுற்றி இருக்கும் ஊர்ப் பெண்கள் எல்லோரும் வந்து விடுவார்கள்" என்ற வாறே சின்னவள்  கண்ணாடிக் கடையில் நுழைந்தாள்.

பெரியவள் "வாங்க அத்த அந்த சேலையைப் பார்ப்போம்" என்று மாமியாரையும் அழைத்துக் கொண்டு நுழைந்தாள். 

"அக்கா நான் வரும் வரை அங்கேயே நில்லுங்க" என்றாள் சின்னவள்.

" ஆ சரி சரி" என்றாள் மூத்தவள் .

சற்று நேரத்தில் சின்னவளும் வந்து விட்டாள்.

(தொடரும்)

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments