
405.வினா : எது நட்பன்று?
விடை : முகம் சிரிக்கப் பழகுவது மட்டும் நட்பாகாது
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.(786)
406.வினா:எது நட்பு?
விடை: உள்ளன்புடன் மனம் மகிழும்படி பழகுவதே நட்பு
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.(786)
407.வினா:மானம் காக்கும் நட்பு எது?
விடை:துன்பத்தில் விரைந்து காப்பதே
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு(788)
ALLSO READ...CLICK HERE👇

408.வினா : ஆராயாமல் ஏற்கும் நட்பு எத்தகையது?
விடை: இறுதியில் தெரிந்தே சாவது போன்ற துன்பம்தரும்
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.(792)
409. வினா :கொடுத்தும் கொள்ள வேண்டிய நட்பு எது?
விடை: பழிக்கு வெட்கப்படுபவன் நட்பை
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு(794)
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments