
ஜெர்மனி நாட்டின் முயூனிக் நகரில் காரைக் கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 30 பேர் வரை படுகாயம் அடைந்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
சந்தேகத்திற்குரிய தாக்குதலாக இது இருக்கலாம் என்று ஜெர்மனி நாட்டின் காவல்துறை தரப்பு தெரிவித்தது
ஜெர்மனியில் நிகழ்ந்த தாக்குதல் குறித்து நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்
பொதுமக்கள் மீது காரைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய ஆடவன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டான்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள், திருட்டு குற்றப்பின்னணி கொண்டவராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்-
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments