Ticker

6/recent/ticker-posts

Ad Code



வட இந்தியாவில் தொடரும் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்! : டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் பலி!


பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்தில் நிர்வாகத் தோல்வி காரணமாக கும்பமேளா கூட்டநெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் மற்றொரு கூட்ட நெரிசல் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

ரயில்வே துறையில் ஏற்படும் நிர்வாக தோல்வியின் மற்றொரு நிகழ்வாகவும் இந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு அமைந்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு ஆண்டுதோறும் பெருமளவு நிதி ஒதுக்கப்படுவது ஒன்றிய பா.ஜ.க.வினருக்கும், அவர்களுக்கு நேரடியாகவும் அல்லது மறைமுகமாகவும் தேவைப்படுபவர்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது மக்கள் பாதுகாப்பில் ஒன்றிய அரசு காண்பிக்கும் இது போன்ற அலட்சியப்போக்குகளின் வழி வெளிப்பட்டுள்ளது.

கேட்காத விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடும் பா.ஜ.க, மக்கள் கூட்டம் உண்டாகும் என அறிந்தும் பாதுகாப்பை பலப்படுத்த தவறியது தேசிய அளவில் கண்டனங்களை பெற்றுள்ளது.

பா.ஜ.க அரசின் ரயில்வே துறையில் ஏற்பட்டிருக்கிற நிர்வாக தோல்வியால், நேற்று (பிப்.15) இரவு 18 உயிர்கள் பிரிந்துள்ளன. அதில் 14 பேர் பெண்கள்.

இது குறித்து தனது X சமூக வலைதளப் பக்கத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் உயிரிழப்பு மூலம் ரயில்வேயின் தோல்வியும், ஒன்றிய அரசின் அலட்சியமும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. நிர்வாக தோல்வியால் இனியும் உயிரிழப்பு ஏற்படுவதை அரசு உடனடியாக தடுத்திட வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

kalaignarseithigal

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments