Ticker

6/recent/ticker-posts

Ad Code



35/5 டூ 228.. போராடிய வங்கதேசம்.. இந்தியாவுக்காக ஐசிசி ஒருநாள் தொடரில் ஜஹீர் கானை முந்திய ஷமி மாபெரும் சாதனை

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தம்முடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 20ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக கிடைத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சௌமியா சர்க்கார் ஆரம்பத்திலேயே ஷமி வேகத்தில் டக் அவுட்டானார்.


அடுத்து வந்த கேப்டன் சாண்டோ ராணா வேகத்தில் டக் அவுட்டான நிலையில் அதற்கடுத்ததாக வந்த மெஹதி ஹசனை 5 ரன்னில் ஷமி காலி செய்தார். போதாகுறைக்கு மறுபுறம் நிதானமாக விளையாடிய தன்சிம் ஹசன் 25 ரன்களிலும் அதற்கடுத்ததாக ரஹீம் 0 ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார்கள்.

அதனால் 35-5 என ஆரம்பத்திலேயே வங்கதேசம் திணறிய போது அடுத்த பந்திலேயே ரோகித் சர்மா கேட்ச் விட்டார். அப்போது மிடில் ஆடரில் தவ்ஹீத் ஹ்ரிடாய் – ஜாகிர் அலி ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நேரம் செல்ல செல்ல நேர்த்தியாக விளையாட இந்தியாவுக்கு சவாலை கொடுத்து இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்தை மீட்டெடுத்தது.

அதில் ஜாகிர் அலி அரை சதத்தை அடித்து 68 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து கொஞ்சம் காயத்துடன் விளையாடிய ஹ்ரிடாய் தனது முதல் சதத்தை அடித்து 100 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் வங்கதேசத்தை 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது.

இந்திய அணிக்கு முகமது ஷமி 5, ஹர்ஷித் ராணா 3, அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதையும் சேர்த்து ஐசிசி ஒருநாள் தொடர்களில் ஷமி 60* விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதாவது 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக் ஆகிய 2 தொடர்களில் அவர் 60 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

இதன் வாயிலாக ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 

இதற்கு முன் ஜாம்பவான் ஜகீர் கான் 59 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. 
அந்தப் பட்டியல்: 
1. முகமது ஷமி: 60* 
2. ஜஹீர் கான்: 59 
3. ஜவகள் ஸ்ரீநாத்: 47
 4. ரவீந்திர ஜடேஜா: 43

crictamil

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments